பதிவு செய்த நாள்
12 நவ2012
01:30

- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - முன்னணி, 100 நிறுவனங்களில், அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு, கடந்த, ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளன.சென்ற செப்டம்பர் வரையிலான காலாண்டில், மும்பை, பங்குச் சந்தை பட்டியலில் உள்ள, நிறுவன பங்குகளின், ஒட்டு மொத்த சந்தை மதிப்பில், 100 முன்னணி நிறுவனங்களின் பங்களிப்பு, 72 சதவீதமாக உள்ளன.இதில், அன்னிய நிதி நிறுவனங்களின் பங்களிப்பு, கடந்த, ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 37.95 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளன.இது, நடப்பு, 2012ம் ஆண்டு தொடக்கத்தில், 35.48 சதவீதமாக இருந்தது.
கடந்த, 2007ம் ஆண்டு, மும்பை பங்குச் சந்தையின் "சென்செக்ஸ்', 20 ஆயிரம் புள்ளிகளை எட்டியிருந்த போது, முன்னணி, 100 நிறுவனங்களில், அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு, 37.43 சதவீதமாக இருந்தன, என்பது குறிப்பிடத்தக்கது.தேசிய பங்கு சந்தைஇதே போன்று, தேசிய பங்குச் சந்தையின் "நிப்டி' குறியீட்டு எண் கணிப்பிற்கான, 50 நிறுவனங்களில், முன்னணி, 11 நிறுவனங்களில், அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடும், இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளன. கெய்ரன் இந்தியா, எச்.டீ.எப்.சி., சிப்லா, கோத்ரெஜ் கன்ஸ்யூமர், டாட்டா குளோபல், ஐ.டீ.எப்.சி., எச்.டீ.ஐ.எல்., டைட்டான் இண்டஸ்ட்ரீஸ், "அல்ட்ரா டெக்' சிமென்ட்ஸ், டாட்டா மோட்டார்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில், அன்னிய நிதி நிறுவனங்கள், அவற்றின் பங்கு, முதலீட்டை உயர்த்திக் கொண்டுள்ளன.இந்திய நிறுவனங்களில், அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு அதிகரித்து வருவதை, பங்குச் சந்தையின் ஏற்றத்திற்கான, முன் அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம் என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர். எடுத்துக்காட்டாக, கடந்த, 2006ம் ஆண்டு டிசம்பரில், மும்பை பங்குச் சந்தையின் முன்னணி, 100 நிறுவனங்களில், அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு, 38.54 சதவீதமாக உயர்ந்து காணப்பட்டது.அடுத்த ஓராண்டில், அதாவது, 2007ம் ஆண்டு டிசம்பர் மற்றும், 2008ம் ஆண்டு ஜனவரியில், "சென்செக்ஸ்' உச்சத்திற்கு சென்றது.அதுபோல், தற்போது, அன்னிய நிதி நிறுவனங்களின், பங்கு முதலீடு அதிகரித்து வருவதையொட்டி, விரைவில், பங்குச் சந்தை எழுச்சி காண வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது."வரும், 2013ம் ஆண்டில், "நிப்டி' குறியீட்டு எண், 6,300 புள்ளிகளை தாண்டினால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை' என, சி.என்.ஐ. நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் (ஆய்வு பிரிவு) கிஷோர் ஆஸ்த்வால் தெரிவித்தார்.நடப்பு, 2012ம் ஆண்டில், தற்போது வரை, அன்னிய நிதி நிறுவனங்கள், 94,381 கோடி ரூபாய் அளவிற்கு, இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்துள்ளன. இதில், 50 சதவீதம், அதாவது, 51,972 கோடி ரூபாய் அளவிலான முதலீடு, சென்ற, ஜூலை மாதத்திற்கு பிறகு, மத்திய அரசு அறிவித்த, பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.இதனிடையே, பங்குச் சந்தையின் ஏற்றத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பல நிறுவனர்கள், தங்கள் நிறுவனங்களில் கொண்டிருந்த பங்கு முதலீட்டை குறைத்துக் கொண்டுள்ளனர்.டெக் மகிந்திரா குறிப்பாக, டெக் மகிந்திரா, பியூச்சர் கேப்பிடல், ஆன் மொபைல் குளோபல், யூ.பீ.ஹோல்டிங்ஸ், எஜூகாம்ப் சொல்யூஷன்ஸ், எஸ்.கே.எஸ். மைக்ரோ பைனான்ஸ், என்.ஐ.ஐ.டி. டெக்னாலஜி போன்ற முன்னணி நிறுவனங்களில், நிறுவனர்களின் பங்கு மூலதனம் குறைந்துள்ளது.சென்ற, செப்டம்பர் வரையிலான காலாண்டில், ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட, பங்குச் சந்தை பட்டியலில் உள்ள, 492 நிறுவனங்களில், 96 நிறுவனங்களில், நிறுவனர்களின் பங்கு மூலதனம், 1.36 சதவீதம் குறைந்துள்ளன, என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|