பதிவு செய்த நாள்
13 நவ2012
02:12
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - நடப்பு நிதியாண்டின், சென்ற செப்டம்பர் வரையிலான முதல் ஆறு மாத காலத்தில், பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி, 7.6 சதவீதம் சரிவடைந்து, 2.89 கோடி டன்னாக குறைந்துள்ளது.இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில், 3.12 கோடி டன்னாக இருந்தது.மதிப்பீட்டு காலத்தில், டாலர் அடிப்படையிலான பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி, 13 சதவீதம் சரிவடைந்து, 2,640 கோடி டாலராக குறைந்துள்ளது.அதே சமயம், இதே காலத்தில், ரூபாய் மதிப்பின் அடிப்படையில், பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி, 4 சதவீதம் உயர்ந்து, 1.44 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
சென்ற 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி, 6.08 கோடி டன்னாக இருந்தது. இது, நடப்பு 2012-13ம் நிதியாண்டில், 6.90 கோடி டன்னாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டின், முதல் ஆறு மாத காலத்தில், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் உற்பத்தி,10.43 கோடி டன்னாக உள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில், 10 கோடி டன்னாக குறைந்து காணப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|