பதிவு செய்த நாள்
28 நவ2012
17:11
ரூ.4 லட்சம் விலைக்குள் புதிய குட்டிக் காரை அறிமுகப்படுத்த ஹோண்டா கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. என் பாக்ஸ் பிளாட்பார்மில் இந்த புதிய காரை ஹோண்டா வடிவமைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தியா, சீனா உள்ளிட்ட வேகமாக வளரும் மார்க்கெட்டை குறிவைத்து இந்த புதிய குட்டிக் காரை களமிறக்குகிறது. ஜப்பான் மார்க்கெட்டில் தற்போது என் பாக்ஸ் பிளாட்பார்மில் என் பாக்ஸ், என் பாக்ஸ்+ மற்றும் என் ஒன் ஆகிய 3 கார்களை ஹோண்டா விற்பனை செய்து வருகிறது. இதில், ஹோண்டா சமீபத்தில் அறிமுகம் செய்த என் ஒன் காரை அடிப்படையாக வைத்து புதிய காரை வடிவமைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரில் புதிய 660 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த கார் லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் செல்லும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் . இது சிறிய கார் என்றாலும் மாருதி வேகன் ஆர் போன்று 'டால்பாய்' டிசைனை கொண்டிருக்கும் என்பதால் அதிக ஹெட்ரூம் கிடைக்கும் என்பதோடு, காருக்குள் ஏறி, இறங்குவதும் எளிதாக இருக்கும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|