பதிவு செய்த நாள்
11 டிச2012
23:35

புதுடில்லி: கோதுமை கையிருப்பு அதிகரித்துள்ளதால், மேலும், 25 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதிக்கு அனுமதி கோரி, மத்திய உணவு அமைச்சகம், மத்திய அரசிடம் விண்ணப்பிக்க உள்ளது.கையிருப்புடிச., 1ம் தேதி நிலவரப்படி, மத்திய அரசிடம், 3.76 கோடி டன் கோதுமை கையிருப்பு உள்ளது. வரும், 2013ம் ஆண்டு ஜனவரியில், 2.50 கோடி டன் கோதுமை கையிருப்பில் இருக்கவேண்டும்.உள்நாட்டு தேவையை விட, கோதுமை கையிருப்பு அதிகம் உள்ளதால், மத்திய அரசு, 20 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதிக்கு அனுமதி அளித்தது.இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், பல கட்டங்களாக, இதுவரை 18 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, சர்வதேச சந்தையில் கோதுமைக்கான தேவை அதிகரித்துள்ளது. அதே சமயம், கோதுமை வரத்து குறைந்துள்ளது. இதனால், கோதுமை விலை உயர்ந்துள்ளது.சர்வதேச சந்தையில், சில மாதங்களுக்கு முன், ஒரு டன் இந்திய கோதுமையின் விலை, 296 - 322 டாலர் என்ற அளவில் இருந்தது.அமெரிக்காஇது, தற்போது, 325-330 டாலராக உயர்ந்துள்ளது. அதே சமயம், ஒரு டன் அமெரிக்க கோதுமையின் விலை, 370 டாலராக உள்ளது.இதனால், வெளிநாடுகள், குறைந்த விலையில் கிடைக்கும் இந்திய கோதுமையை அதிக அளவில் வாங்கி வருகின்றன.இதை கருத்தில் கொண்டும், தற்போது உள்ள உபரி கையிருப்பாலும், கூடுதலாக, 25 லட்சம் டன் கோதுமையை ஏற்றுமதி செய்யலாம் என, மத்திய உணவு அமைச்சகம் தீர்மானித்துள்ளது.இது குறித்து, மத்திய அமைச்சர் அவைக் குழு, இவ்வாரம் பரிசீலித்து ஒப்புதல் வழங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.வறட்சியால் பாதிக்கப்பட்ட, ரஷ்யா, உக்ரைன் மற்றும் கஜகஸ்தான் நாடுகளின் கோதுமை ஏற்றுமதி குறைந்துள்ளது. இது, இந்திய கோதுமை ஏற்றுமதியாளர்களின் வர்த்தக வாய்ப்பை அதிகரித்துள்ளது.தாய்லாந்துஇந்தியாவில் இருந்து, வங்கதேசம், தென்கொரியா, தாய்லாந்து, வியட்னாம், இந்தோனேஷியா, ஏமன், ஓமன் உள்ளிட்ட நாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.கடந்த 2011-12ம் பயிர் பருவத்தில் (ஜூலை-ஜூன்), நாட்டின் கோதுமை உற்பத்தி, சாதனை அளவாக, 9.39 கோடி டன்னை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|