பதிவு செய்த நாள்
17 டிச2012
23:47

ஒட்டன்சத்திரம் :உள்ளூர் வரத்து குறைவு காரணமாக, கர்நாடகாவில் இருந்து வெங்காயம், பரோடாவில் இருந்து முருங்கைக்காய், ஆந்திராவில் இருந்து பச்சை மிளகாய் ஆகியவை ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு கொண்டு வரப்படுகின்றன.கர்நாடகா வெங்காயம்: பற்றாக்குறையை சமாளிக்க கர்நாடக மாநிலத்தில் இருந்து வெங்காயம் ஒட்டன்சத்திரம் சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த வெங்காயம், "சிட்டு' வெங்காயம் என்று அழைக்கப்படுகிறது. பல்லாரி வெங்காயத்தை விட சிறியதாகவும், சின்ன வெங்காயத்தை விட சற்று பெரிதாகவும் காணப்படுகிறது. கிலோ 21 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.பரோடா முருங்கை: ஒட்டன்சத்திரம் பகுதியில் முருங்கை வரத்து முற்றிலும் இல்லாததால், பரோடாவில் இருந்து முருங்கைக்காய்கள் லாரிகளில் கொண்டு வரப்படுகின்றன. ஒரு கிலோ 65 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.ஆந்திரா பச்சை மிளகாய்: இதே போல் ஆந்திராவில் இருந்து பச்சை மிளகாய் கொண்டு வரப்படுகிறது. உள்ளூர் மிளகாய்க்கு நிகராக, ஆந்திரா மிளகாயும் கிலோ 19 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.தேவைகள் அதிகரித்துள்ளதாலும் தமிழகத்தில் விளைச்சல் குறைவு காரணமாகவும், வெளி மாநிலங்களில் இருந்து வெங்காயம், முருங்கை, மிளகாய் ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டு ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு மொத்த வியாபாரிகள் கொண்டு வருகின்றனர். இங்கிருந்து மாநிலத்தின் பிற மாவட்டங்களுக்கு இவை அனுப்பப்படுகின்றன.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|