பதிவு செய்த நாள்
17 டிச2012
23:48

விருதுநகர் :தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால், மானாவாரி பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி பிரச்னையால், டெல்டா பகுதியில் போதுமான பாசன வசதி இல்லாமல் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, எண்ணெய் வித்துக்கள், கடலை பருப்பு, மற்றும் துவரை, உளுந்து, பாசி பயறு வகைகளின் உற்பத்தி சரிவடைந்துள்ளது. சந்தையில் வரத்தும் குறைந்து விட்டது.அதே சமயம், குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகளின் உற்பத்தி அதிகரித்துள்ளது.இதனால், தமிழக வியாபாரிகளுக்கு, வட மாநிலங்களில் இருந்து எள்,பருப்பு வகைகளை கொள்முதல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானிலிருந்து ஒரு லாரியில் 10 - 20 டன் வரை உணவு தானியங்களை கொண்டு வரலாம். இதற்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வாடகை செலவாகிறது.தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு, தொடர்ந்து உணவு தானியங்கள் கொண்டு வரப்படுவதால், வட மாநில லாரி உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், கொள்முதல் விலை உயர்வு காரணமாக தமிழகத்தில், உணவு தானியங்களின் விலையை உயர்த்த வேண்டியுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து, விருதுநகர் எண்ணெய் வியாபாரி சாவி நாகராஜ் கூறும்போது, ""ராஜஸ்தானில் இருந்து தான், கடலை பருப்பு தமிழகத்திற்கு வருகிறது. ஒரு லோடு கொண்டுவர, ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாய், லாரி வாடகை தர வேண்டியுள்ளது. இதனால், கடலை எண்ணெய் விலை தான் கூடும்'' என்றார்.பருப்பு வியாபாரி கார்த்திகேயன் கூறுகையில், ""வடமாநிலங்களில் இருந்து வரும் சரக்கு மதிப்பில், 15 சதவீதம், லாரி வாடகையாக தர வேண்டிய நிலை உள்ளது. வாடகை செலவை, உணவுப் பொருளின் விலையேற்றம் மூலம், நுகர்வோர் தலையில் சுமத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,'' என்றார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|