பதிவு செய்த நாள்
20 டிச2012
00:09

மும்பை:வீடியோகான் குழுமத்தைச் சேர்ந்த பாரத் பிசினஸ் சேனல் நிறுவனம், டீ.டி.எச். எனப்படும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வீடுகளுக்கு நேரடியாக அளிக்கும் சேவையில் ஈடுபட்டு வருகிறது. 'வீடியோகான் டீ2எச்' என்ற பிராண்டில், இந்நிறுவனம் மேற்கண்ட சேவையை வழங்கி வருகிறது. இந்நிறுவனம், செட்டாப் பாக்ஸ் உள்ளிட்ட இதர சாதனங்கள் வாங்குவதற்கும், குறித்த கால கடனை அடைப்பதற்கும் தேவையான பகுதி நிதியை திரட்டி கொள்வதற்காக, பொது மக்களுக்கு, பங்குகளை வெளியிட்டு, மூலதனச் சந்தையில் களமிறங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, இந்நிறுவனம், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான,'செபி'யின் அனுமதி வேண்டி விண்ணப்பித்துள்ளது. இப்பங்கு வெளியீடு வாயிலாக, 700 கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்நிறுவனம், பங்கு வெளியீட்டிற்கு முன்பாக, தனிப்பட்ட பங்கு ஒதுக்கீடு வாயிலாக, ஒரு கோடி பங்குகள் ஒதுக்குவதன் மூலம், 50 கோடி ரூபாய் திரட்டவும் திட்டமிட்டுள்ளது. சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த ஆறு மாத காலத்தில், இந்நிறுவனம், 493 கோடி ரூபாய் மொத்த வருவாயில், 270 கோடி ரூபாயை இழப்பாக கண்டுள்ளது. இந்நிறுவனம், டீ.டி.எச்., சேவையை, கடந்த 2009ம் ஆண்டு ஜூலை மாதம் துவக்கியது. நடப்பாண்டு, செப்டம்பர் 30ம் தேதி வரையிலுமாக, நாடு தழுவிய அளவில், இந் நிறுவனத்திற்கு, 66.20 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இது, இச்சந்தையில், 13 சதவீத பங்களிப்பாகும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|