பதிவு செய்த நாள்
20 டிச2012
00:16

சென்னை:நேற்று, ஒரே நாளில் ஆபரண தங்கத்தின் விலை, சவரனுக்கு, 504 ரூபாய் சரிவடைந்து, 23,008 ரூபாய்க்கு விற்பனையானது.பண்டிகை சீசன் முடிவடைந்த நிலையிலும், தங்கத்தின் விலை அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.
கடந்த செவ்வாயன்று, 22 காரட் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை, 2,939 ரூபாய்க்கும், ஒரு சவரன், 23,512 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், நேற்று ஒரே நாளில், தங்கத்தின் விலை, கிராமுக்கு, 63 ரூபாய் குறைந்து, 2,876 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 504 ரூபாய் சரிவடைந்து, 23,008 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.24 காரட் 10 கிராம் சுத்த தங்கத்தின் விலை, 670 ரூபாய் குறைந்து, 31,430 ரூபாயிலிருந்து, 30,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: சர்வதேச சந்தையில், நேற்று முன்தினம், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, 35 டாலர் குறைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு வலுவடைந்தது. இது போன்ற காரணங்களால், தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இவ்வாறு சலானி கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|