பதிவு செய்த நாள்
20 டிச2012
00:27

புதுடில்லி:இந்தியாவில், கப்பல் கட்டும் தொழிலுக்கு தேவையான மூலப்பொருள்கள், உதிரிபாகங்கள் போதுமான அளவிற்கு கிடைக்காத நிலை உள்ளது. இதனால், நாட்டில், முன்னணியில் உள்ள கப்பல் கட்டும் நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து, 80 சதவீத அளவிற்கு,மூலப்பொருள்கள் மற்றும் உதிரிபாகங்களை இறக்குமதி செய்து வருகின்றன.
இந்த வகையில், கடந்த மூன்று நிதியாண்டுகளில், இந்திய கப்பல் கட்டுமான துறையை சேர்ந்த ஐந்து நிறுவனங்கள், 6,700 கோடி ரூபாய்க்கு அதிகமாக, மூலப்பொருட்களையும், உதிரிபாகங்களையும் இறக்குமதி செய்து கொண்டுள்ளன.இதை, கப்பல் போக்குவரத்து அமைச்சர் ஜி.கே.வாசன், பார்லிமென்டில் தெரிவித்தார்.அவர்மேலும் கூறியதாவது:
இந்திய கப்பல் கட்டுமான சங்கத்தின் புள்ளிவிவரப்படி, நாட்டின் கப்பல் கட்டுமான நிறுவனங்கள், பெரும்பாலான மூலப்பொருட்களையும், உதிரிபாகங்களையும் இறக்குமதி செய்கின்றன.இதனால், இத்துறை நிறுவனங்களின் கப்பல் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.ஐந்தாண்டு மானிய உதவி திட்டம், கப்பல் கட்டும் துறையை ஊக்குவித்து வந்தது. ஆனால், இத்திட்டம் கடந்த 2007ம் ஆண்டு, ஆகஸ்ட் 15க்கு பிறகு விலக்கி கொள்ளப்பட்டது.இது போன்ற ஊக்குவிப்பு திட்டங்களை உருவாக்கும் முயற்சியில், கப்பல் போக்குவரத்து அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|