பதிவு செய்த நாள்
20 டிச2012
17:41

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி மினி டிரக் சந்தையில் அடியெடுத்து வைக்க திட்டமிட்டுள்ளது. வர்த்தக மார்க்கெட்டில் மாருதி நிறுவனம் ஓம்னி கார்கோவை தற்போது விற்பனை செய்து வருகிறது. ஆனால், எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லை. இந்த நிலையில், ஓம்னியை நம்புவதை விட நேரடியாக மினி டிரக் மார்க்கெட்டில் அடியெடுத்து வைக்க மாருதி திட்டமிட்டுள்ளது. கார் மார்க்கெட் போன்றே மினி டிரக் மார்க்கெட்டும் தற்போது படுவேகமாக வளர்ந்து வருவதுதான் காரணம். மினி டிரக் மார்க்கெட்டில் டாடா ஏஸ் மினி டிரக் 50 விழுக்காடு பங்களிப்பை கொண்டிருக்கிறது. இதற்கடுத்து, மஹிந்திரா மேக்ஸிமோ முக்கிய பங்களிப்பை பெற்றுள்ளது. இந்த மார்க்கெட்டில் தன்னையும் நிலை நிறுத்திக் கொள்ள மாருதி திட்டமிட்டுள்ளது. தென் கிழக்கு ஆசிய நாடுகளில் சுஸுகி விற்பனை செய்து வரும் 'கேரி' என்ற மினி டிரக் மாடல்களை இந்திய மார்க்கெட்டிலும் அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டிருக்கிறது. தற்போது மாருதி நிறுவனம் கார்களுக்கான புதிய 2 சிலிண்டர்கள் கொண்ட 800 சிசி திறன் டீசல் எஞ்சினை தயாரித்து வருகிறது. ஆல்ட்டோ 800, வேகன்-ஆர் உள்ளிட்ட கார்களில் இந்த டீசல் எஞ்சினை பொருத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதே எஞ்சினை கேரி மினி டிரக்கிலும் பொருத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|