பதிவு செய்த நாள்
21 டிச2012
00:21

மும்பை:உள்நாட்டில், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி குறைந்ததை அடுத்து, கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம், நடப்பு நிதியாண்டின், செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், 3.65 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை விட, 18 சதவீதம் சதவீதம் அதிகம் என, "இக்ரா' நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில், பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு, டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு சரிவடைந்து போனது போன்றவற்றாலும், இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.கணக்கீட்டு காலத்தில், உள்நாட்டில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி அளவின் அடிப்படையில், 7 சதவீதம் சரிவடைந்து, 4.04 கோடி டன்னாக குறைந்துள்ளது. குறிப்பாக, எரிவாயு உற்பத்தி, 13 சதவீதம் குறைந்துள்ளது.
கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின், "டீ6' எண்ணெய் வயல்களில், எரிவாயு உற்பத்தி எதிர்பார்த்த அளவிற்கு இல்லாதததும், ஒட்டுமொத்த அளவில், எரிவாயு உற்பத்தி குறைவிற்கு காரணமாகும்.இதேபோன்று, பொதுத் துறையை சேர்ந்த ஓ.என்.ஜி.சி., மற்றும் ஆயில் இந்தியா நிறுவனங்களின் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்ததை அடுத்து, ஒட்டுமொத்த அளவில், நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி, 1.91 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது என, "இக்ரா' நிறுவனத்தின் புள்ளி விவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|