பதிவு செய்த நாள்
02 ஜன2013
00:24

புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் நிலக்கரி இறக்குமதி, 7,000 கோடி ரூபாயை தாண்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.நிலக்கரி விலை, 20 சதவீதம் குறைந்து, டன்னுக்கு சராசரியாக, 85 டாலர் வீழ்ச்சி கண்ட நிலையிலும், ஒட்டுமொத்த நிலக்கரி இறக்குமதி, மதிப்பின் அடிப்படையில் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த மூன்று நிதியாண்டுகளாக, நம் நாடு, 15,956 கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளது.
சென்ற 2011-12ம் நிதியாண்டில், இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி, 89.74 சதவீதம் உயர்ந்துள்ளது.இது, முந்தைய 2010-11ம் நிதியாண்டில், அளவின் அடிப்படையில், 5.92 சதவீதம் குறைந்து, 6.90 கோடி டன்னாக இருந்தது. அதேசமயம், மதிப்பின் அடிப்படையில், 6.04 சதவீதம் உயர்ந்து, 4,155 கோடி ரூபாயை எட்டியது.இதற்கு முந்தைய, 2009-10ம் நிதியாண்டில், இந்தியா, 3,918 கோடி ரூபாய் மதிப்பிலான, 7.30 கோடி டன் நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியால், நடப்பு நிதியாண்டில், சர்வதேச நிலக்கரியின் விலை சரிவடைந்த நிலையிலும், இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளதாக இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|