பதிவு செய்த நாள்
02 ஜன2013
00:30

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், புத்தாண்டின் தொடக்க தினமான செவ்வாய்கிழமையன்று மிகவும் சிறப்பாக இருந்தது. அமெரிக்காவின், நிதி சீரமைப்பு திட்டத்தில் நிதான போக்கு கடைபிடிக்கப்படும் என்ற செய்தி வெளியானதைஅடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. 'சென்செக்ஸ்' குறியீட்டு எண், 0.79 சதவீத ஏற்றத்துடன் முடிவடைந்தது.
இதர ஆசிய நாடுகளின், பெரும்பாலான சந்தைகளுக்கு, நேற்று, பொது விடுமுறை விடப்பட்டிருந்தது.நேற்றைய வர்த்தகத்தில், பொறியியல், ரியல் எஸ்டேட், வங்கி, உலோகம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளும் அதிக விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 154.10 புள்ளிகள் அதிகரித்து, 19,580.81 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,623.76 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,508.93 புள்ளிகள் வரையிலும் சென்றது.
'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், என்.டி.பி.சி., இன்போசிஸ், ஹீரோ மோட்டோகார்ப் ஆகிய மூன்று நிறுவனப் பங்குகளை தவிர, ஏனைய, 27 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்து காணப்பட்டது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 45.75 புள்ளிகள் உயர்ந்து, 5,950.85 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,963.90 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,935.20 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|