பதிவு செய்த நாள்
21 ஜன2013
09:09

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (9.03 மணியளவில்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 47.89 புள்ளிகள் அதிகரித்து 20086.93 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 11.85 புள்ளிகள் அதிகரித்து 6083.75 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று நன்கு இருந்தது. மத்திய அரசு, மானியச் சுமையை குறைக்கும் வகையில், பல்வேறு நடவடிக் கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக, எண்ணெயை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், டீசல் விலையை அவ்வப்போது உயர்த்திக் கொள்ள, நேற்று முன்தினம் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, நேற்றும், எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை, 3 சதவீத அளவிற்கு அதிகரித்து காணப்பட்டது. இதன் விளைவாக, கடந்த 2011ம் ஆண்டு, ஜனவரி 6ம் தேதிக்கு பிறகு, நேற்றைய வர்த்தகத்தில்,"சென்செக்ஸ்' குறியீட்டு எண், மீண்டும் 20,000 புள்ளிகளைத் தாண்டி சாதனை படைத்தது. அமெரிக்கா மற்றும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவைக் காட்டிலும் அதிகரித்துள்ளது என்ற செய்தியால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|