பதிவு செய்த நாள்
14 பிப்2013
00:28

பெங்களுரூ:வரும் 2013-14ம் நிதியாண்டிற்கான, மத்திய பட்ஜெட்டில், வருமான வரி வரம்பை, 2 லட்சம் ரூபாயிலிருந்து, 3 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என, மாத ஊதியம் பெறுவோர், மத்திய நிதி அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆய்வுஅசோசெம் அமைப்பு, நாடு தழுவிய அளவில், பல்வேறு துறைகளில் மாத ஊதியம் பெறுவோரிடையே ஆய்வு மேற்கொண்டது.அதில், பெரும்பாலானவர்கள், வருமான வரி, கல்வி மற்றும் மருத்துவ செலவினங்களுக்கான வரி வரம்பை உயர்த்த வேண்டும் என, தெரிவித்து உள்ளனர்.இந்த ஆய்வில், உண்மையான பணவீக்கத்தின் அடிப்படையில், வருமான வரி வரம்பு உயர்த்தப்படவில்லை என, 89 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். வருமான வரி வரம்பை, குறைந்தபட்சம் 3 லட்சம் ரூபாயாகவும், பெண்களுக்கு 3.50 லட்சம் ரூபாயாகவும் நிர்ணயிக்க வேண்டும்.
இதனால், தனி நபரின் வாங்கும் சக்தி பெருகும், தேவை அதிகரிக்கும். நேரடி வரிகள் கோட்பாட்டில், பார்லிமென்ட் நிலைக் குழு தெரிவித்த பரிந்துரைகளின் படி, வரி விலக்கு வரம்பு நிர்ணயிப்பது அவசியம் என, ஆய்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.மருத்துவ செலவினத்திற்கான வரிச் சலுகையை, 15 ஆயிரத்தில் இருந்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என, 89 சதவீதம் பேர் கோரிக்கை விடுத்துள்ளனர்.பயணப்படிநிறுவனங்கள், ஊழியர்களுக்கு தரும் பயணப்படியில், மாதம் 800 ரூபாய் வரை, தற்போது வரி விலக்கு சலுகை உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட இத்தொகையை, தற்போது உயர்ந்துள்ள போக்குவரத்து கட்டணங்களின் அடிப்படையில், 3,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் எனவும், ஆய்வில் பங்கேற்றவர்கள் கோரியுள்ளனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|