பதிவு செய்த நாள்
18 பிப்2013
00:43

புதுடில்லி:இந்திய சந்தைகளில், கரீப் பருவத்தில் விளைந்த வெங்காயத்தின் வரத்து அதிகரித்துஉள்ளதால், அதன் விலை சரிவுஅடையத் துவங்கியுள்ளது. மொத்த விற்பனையில், ஒரு குவிண்டால் வெங்காயம், 1,800 ரூபாயில் இருந்து, 1,000 ரூபாயாக குறைந்துள்ளது.உள்நாட்டில், அதிகளவில் வெங்காயம் உற்பத்தியாகும், மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில், போதிய அளவிற்கு மழைஇல்லாததால், இதன் உற்பத்தி குறைந்துள்ளது.
மதிப்பீடு:கடந்த, 2011-12ம் பருவத்தில் (ஜூலை-ஜூன்), நாட்டின் வெங்காய உற்பத்தி, 1.51 கோடி டன் என, மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நடப்பு 2012-13ம்
பருவத்தில், வெங்காயம் சாகுபடி பரப்பளவு, கடந்த பருவத்தை விட, 15-20 சதவீதம் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அதே சமயம், பல பகுதிகளில், காலதாமதமாக வெங்காயம் பயிர் செய்யப்பட்டுள்ளதால், அதன் உற்பத்தி, சென்ற பருவத்தை ஒத்து இருக்கும் என்ற மதிப்பீடும் உள்ளது.
இதனிடையே, கடந்த இரு மாதங்களாக, சந்தையில் வெங்காய வரத்து குறைந்ததால், அதன் விலை, கிடு... கிடு... வென உயர்ந்தது.நாட்டின் பல மாநிலங்களில், கடந்த வார நிலவரப்படி, சில்லரை விற்பனையில், ஒரு கிலோ வெங்காயத்தின் விலை, 35-40 ரூபாய் வரை அதிகரித்தது.
இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், 13-15 ரூபாயாக இருந்தது.இந்நிலையில், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், காலதாமதமாக பயிர் செய்யப்பட்ட வெங்காயத்தை, அறுவடை செய்வதில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
நாசிக்:இதனால், நாசிக்கில் உள்ள, ஆசியாவின் மிகப் பெரிய சந்தையான லசல்கானில், கடந்த சில நாட்களாக வெங்காய வரத்து அதிகரித்துள்ளது. இங்கு, இரு வாரங்களுக்கு முன்பு, மொத்த விற்பனையில், ஒரு குவிண்டால் வெங்காயத்தின் விலை, 1,800 ரூபாயாக இருந்தது. இது, தற்போது, 1,000 ரூபாயாக குறைந்துள்ளது.
சந்தையில், வெங்காய வரத்து அதிகரிக்கும் என்பதால், அதன் விலை மேலும் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவின் மொத்த வெங்காய உற்பத்தியில், மகாராஷ்டிராவின் பங்களிப்பு, 40 சதவீதமாக உள்ளது. இதனால், இங்கு உற்பத்தியாகும் வெங்காயம், நாட்டின் பல மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
ராஜஸ்தான்:அதுபோன்று, ராஜஸ்தானிலும், வெங்காய வரத்து அதிகரித்துள்ளதால், இங்கிருந்தும், பிற மாநிலங்களுக்கு அதிக அளவில் வெங்காயம் கொண்டு செல்லப்படுகிறது.
இதனால், நாடு தழுவிய அளவில், சில்லரை விற்பனையில், ஒரு கிலோ வெங்காயம் விலை, 20 -25 ரூபாயாக குறைந்துள்ளது. சந்தைகளில் வெங்காய வரத்து அதிகரித்துள்ளதால், இதன் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது என, இத்துறை சார்ந்த வர்த்தகர்கள் தெரிவித்தனர்.கடந்த பருவத்தில் வெங்காய உற்பத்தி அதிகரித்ததால், சென்ற ஆண்டு மே மாதம், அதன் ஏற்றுமதி மீதான தடையை மத்திய அரசு நீக்கியது. வெங்காய ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.மேலும், வெங்காயத்திற்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை மீண்டும் நிர்ணயிக்கவும், மத்திய அரசு மறுத்து விட்டது.
இதனால், வெங்காயம் தாராளமாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல், சராசரியாக மாதந்தோறும் ஒரு லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.இரண்டாவது இடம்உலகில், வெங்காய உற்பத்தியில், இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. சென்ற, 2011-12ம் நிதியாண்டில், இந்தியா 15 லட்சம் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்து, 1,714 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.உள்நாட்டில், பெரிய வியாபாரிகள், கூட்டணி அமைத்துக் கொண்டு, வெங்காயத்தின் விலையை செயற்கையாக உயர்த்துவதாக, தேசிய வர்த்தக போட்டி கட்டுப்பாட்டு ஆணையம் (சி.சி.ஐ.,) அண்மையில் தெரிவித்துஇருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|