பதிவு செய்த நாள்
28 பிப்2013
00:14

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான, 10 மாத காலத்தில், நாட்டின் இரும்புத் தாது ஏற்றுமதி, 163.47 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 515.19 லட்சம் டன்னாக மிகவும் அதிகரித்து காணப்பட்டது என, எப்.ஐ.எம்.ஐ., அமைப்பு தெரிவித்துள்ளது. ஆக, மதிப்பீட்டு காலத்தில், இரும்புத் தாது ஏற்றுமதி, 68.27 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
குறிப்பாக, நடப்பாண்டு ஜனவரி மாதத்தில், இதன் ஏற்றுமதி, 85.54 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 7.96 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது. கடந்த, 2012ம் ஆண்டு இதே மாதத்தில், இதன் ஏற்றுமதி, 55.04 லட்சம் டன் என்ற அளவில் சிறப்பாக அதிகரித்து காணப்பட்டது.இதே போன்று, கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலும், இதன் ஏற்றுமதி, 95.14 சதவீதம் சரிவடைந்து, 45.49 லட்சம் டன்னிலிருந்து, 2.21 லட்சம் டன்னாக வீழ்ச்சி கண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|