பதிவு செய்த நாள்
28 பிப்2013
09:15

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (09.07 மணியளவின்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 89.60 புள்ளிகள் அதிகரித்து 19242.01 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 31.20 புள்ளிகள் குறைந்து 5828.10 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வியாபாரம் நேற்று நன்கு இருந்தது. முக்கிய நிறுவனப் பங்குகளின் விலை குறைந்துஇருந்ததை சாதகமாக பயன்படுத்தி, சில்லரை முதலீட்டாளர்கள், அதிகளவில் முதலீடு மேற்கொண்டதை அடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இருப்பினும், இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.நேற்றைய வர்த்தகத்தில், பொறியியல், ரியல் எஸ்டேட், எரிவாயு உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், ஆரோக்கிய பராமரிப்பு, தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|