பதிவு செய்த நாள்
02 மார்2013
00:45

புதுடில்லி: சென்ற பிப்ரவரி மாதத்தில், நாட்டின் முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பொருளாதார சுணக்க நிலை மற்றும் டீசல் விலை உயர்வால், ஒரு சில நிறுவன ங்களின் வாகன விற்பனை சற்று சரிவடைந்துள்ளது.
சுங்க வரி:இந்நிலையில், வரும் நிதிஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், இறக்குமதி செய்யப்படும் சொகுசு கார்கள் மீது, 100 சதவீத சுங்க வரியும், உள்நாட்டில் தயாரிக்கப்படும் பன்முக பயன்பாட்டு வாகனங்களின் மீதான வரி உயர்வும் ஒட்டு மொத்த அளவில், வாகன விற்பனையில் மந்த நிலையை ஏற்படுத்தும் என, இத்துறையைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் உயரதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.
மாருதி சுசூகி:உள்நாட்டில் கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள மாருதி சுசூகி இந்தியா, சென்ற பிப்ரவரியில், 1.10 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், 1.19 லட்சமாக அதிகரித்து காணப்பட்டது.ஆக, மதிப்பீட்டு மாதத்தில், இந்நிறுவனத்தின் வாகன விற்பனை, 7.89 சதவீதம் சரிவடைந்து உள்ளது.
குறிப்பாக, உள்நாட்டில், இந்நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை, 9.01 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 1.08 லட்சம் என்ற எண்ணிக்கையிலிருந்து, 97,955 ஆக சரிவைக் கண்டுள்ளது.அதேசமயம், இதன் வாகனங்கள் ஏற்றுமதி, 2.80 சதவீதம் வளர்ச்சி கண்டு, 11,296 லிருந்து, 11,612 ஆக அதிகரித்துள்ளது.
ஹூண்டாய் மோட்டார்:கார் உற்பத்தியில், இரண்டாவது இடத்தில் உள்ள ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், சென்ற பிப்ரவரியில், 54,665 வாகனங்களை விற்பனை செய்து உள்ளது. இது, கடந்த 2012ம் ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை (51,885 வாகனங்கள்) விட, 5.4 சதவீதம் அதிக மாகும்.அதேசமயம், இதே காலத்தில், உள்நாட்டில் இந்நிறுவனத்தின் கார் விற்பனை, 7.6 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 36,805 என்ற எண்ணிக்கையிலிருந்து, 34,002 ஆக சரிவைக் கண்டுள்ளது.
இருப்பினும், மதிப்பீட்டு மாதத்தில், இந்நிறுவனத்தின் வாகன ஏற்றுமதி, 37.2 சதவீதம் வளர்ச்சி கண்டு, 15,050 என்ற எண்ணிக்கையிலிருந்து, 20,663 ஆக அதிகரித்துள்ளது.
டி.வி.எஸ்., மோட்டார்:டி.வி.எஸ்., மோட்டார் கம்பெனி, சென்ற பிப்ரவரி மாதத்தில், 1.66 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த 2012ம் ஆண்டு இதே மாதத்தில், 1.72 லட்சமாக அதிகரித்து காணப்பட்டது.
இருசக்கர வாகனங்கள் பிரிவில், இந்நிறுவனத்தின் விற்பனை, 1.69 லட்சத்திலிருந்து, 1.61 லட்சமாக சரிவடைந்துள்ளது. குறிப்பாக, உள்நாட்டில் வாகனங்கள் விற்பனை, 1.53 லட்சம் என்ற எண்ணிக்கையிலிருந்து, 1.43 லட்சமாக குறைந்துள்ளது.
மோட்டார் சைக்கிள் பிரிவில் இந்நிறுவனத்தின் விற்பனை, 63,019 லிருந்து, 60,985 ஆக குறைந்துள்ளது. மேலும், ஸ்கூட்டர்கள் விற்பனையும், 36,693 என்ற எண்ணிக்கையிலிருந்து, 30,611 ஆக சரிவடைந்துள்ளது.அதேசமயம், இந்நிறுவனத்தின் வாகனங்கள் ஏற்றுமதி, 22 சதவீதம் உயர்ந்து, 17,960 லிருந்து, 21,896 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.
இதே போன்று, மூன்று சக்கர வாகன விற்பனையும், 57 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3,065 என்ற எண்ணிக் கையி லிருந்து, 4,801 ஆக அதிகரித்துள்ளது.
டொயோட்டா:சென்ற பிப்ரவரி மாதத்தில், டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் வாகன விற்பனை, 23.43 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 16,659 என்ற எண்ணிக்கையிலிருந்து, 12,756 ஆக சரிவைக் கண்டுள்ளது.
ரெனோ இந்தியா: கடந்த பிப்ரவரியில், ரெனோ இந்தியா நிறுவனத்தின் கார் விற்பனை, 673 என்ற எண்ணிக் கையிலிருந்து, 6,723 ஆக உயர்ந்து உள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், இந்நிறுவனத்தின் எஸ்.யு.வி. வகையைச் சேர்ந்த டஸ்டர் கார்களின் விற்பனை, சிறப்பான அளவில் அதிகரித்ததையடுத்து, ஒட்டு மொத்த அளவில் விற்பனை, 10 மடங்கு உயர்ந்துள்ளதாக, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மகிந்திரா:சென்ற பிப்ரவரி மாதத்தில், மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தின் வாகன விற்பனை, 10.99 சத வீதம் அதிகரித்து, 43,087 லிருந்து, 47,824 ஆக வளர்ச்சி கண்டுள்ளது. உள்நாட்டில், இந்நிறுவனத்தின் வாகன விற்பனை, 9.73 சதவீதம் உயர்ந்து, 40,461 என்ற எண்ணிக்கையிலிருந்து, 44,399 ஆக அதிகரித்து உள்ளது.
ஸ்கார்பியோ, பொலேரோ, வெரிட்டோ உள்ளிட்ட ஒட்டுமொத்த பயணிகள் கார் விற்பனை, 13.84 சதவீதம் அதிகரித்து, 20,573 லிருந்து, 23,421 ஆக உயர்ந்துள்ளது.அதேசமயம், மூன்று சக்கர வாகன பிரிவில், இந்நிறு வனத்தின் விற்பனை, 6.03 சதவீதம் சரிவடைந்து, 5,111 என்ற எண்ணிக்கையிலிருந்து, 4,803 ஆக குறைந்து உள்ளது.இந்நிறுவனத்தின் வாகன ஏற்றுமதி, 30.43 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2,626 லிருந்து, 3,425 ஆக அதிகரித்துள்ளது.
இந்திய மோட்டார் யமஹா நிறுவனத்தின், இருசக்கர வாகன விற்பனை, சென்ற பிப்ரவரியில், 16.81 சத வீதம் வளர்ச்சி கண்டு, 40,655ல் இருந்து, 47,490 ஆக அதிகரித்துள்ளது.உள்நாட்டில், இந்நிறுவனத்தின் வாகன விற்பனை, 18.66 சதவீதம் உயர்ந்து, 27,050 லிருந்து, 32,097 ஆக உயர்ந்துள்ளது.மேலும், இதன் வாகன ஏற்றுமதியும், 13.14 சதவீதம் அதிகரித்து, 13,605 லிருந்து, 15,393 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|