பதிவு செய்த நாள்
08 மார்2013
00:17

புதுடில்லி:நடப்பு எண்ணெய் சந்தைப்படுத்தும் பருவத்தில் (நவ.,-அக்.,), நாட்டின், தாவர எண்ணெய் இறக்குமதி, கடந்த பருவத்தை விட, 7 சதவீதம் அதிகரித்து, 1.09 கோடி டன்னாக உயரும் என, தனியார் ஆய்வு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
உள்நாட்டில், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி குறைந்துள்ளது. தேவையை பூர்த்தி செய்ய, மத்திய அரசு, தாவர எண்ணெய் வகைகளை அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது.
இறக்குமதி: கடந்த பருவத்தில், நாட்டின், தாவர எண்ணெய் இறக்குமதி, 1.02 கோடி டன்னாக இருந்தது. இது, நடப்பு பருவத்தில், 1.09 கோடி டன்னாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது.
பயன்பாடு:உள்நாட்டில், நடப்பு 2012-13ம் பருவத்தில், தாவர எண்ணெய் பயன்பாடு, 1.75 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த பருவத்தில், 1.65 கோடி டன்னாக இருந்தது.உணவு பொருட்களின் விலை உயர்ந்தால், அது, நாட்டின் பணவீக்கத்தை அதிகரிக்க வழிவகுத்திடும்.
இதை கருத்தில் கொண்டே, கச்சா சமையல் எண்ணெய் மீது, 2.5 சதவீதம் என்ற அளவிலும், சுத்திகரிக் கப்பட்ட எண்ணெய் மீது, 7.5 சதவீதம் என்ற அளவிலும் குறைவாக சுங்க வரி விதிக்கப்படுகிறது.மத்திய அரசு, உள்நாட்டில், எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், இவற்றிற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்கம்:பணவீக்கம் குறையும் நிலையில், நாட்டின், விவசாயிகள் மற்றும் எண்ணெய் உற்பத்தியாளர்களின் நலன் கருதி, இறக்குமதி செய்யப்படும் கச்சா சமையல் எண்ணெய் மீதான சுங்க வரி, 10 சதவீதமாகவும், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மீதான வரி,17.5 சதவீதமாகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என, ஆ#வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|