பதிவு செய்த நாள்
20 மார்2013
00:50

மும்பை:வங்கிகளில், புதிய காசோலை நடைமுறை, வரும் ஏப்ரலில் அமலுக்கு வர இருந்த நிலையில், அதை ஜூலை 31ம் தேதி வரை, மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டித்து, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.காசோலை வாயிலான பணப்பரிமாற்றத்தை மிக விரைவாக, ஒரே நாளில் மேற்கொள்ளக்கூடிய தொழில்நுட்ப வசதியை, அனைத்து வங்கிகளிலும் நடைமுறைப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
தொழில்நுட்பம்:"சி.டி.எஸ்' (செக் டிரன்கேஷன் சிஸ்டம்) என்ற இந்த திட்டத்தின் கீழ், அனைத்து வங்கிகளும்சி.டி.எஸ்-2010' தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட காசோலைகளை பயன்படுத்த வேண்டும்.இவை "ஸ்கேன்' செய்யப்பட்டு, ஆன்-லைன் வாயிலாகவே, மற்றொரு வங்கிக் கிளைக்குஅனுப்பி வைக்கப் படும். இதையடுத்து, வாடிக்கையாளருக்கு, காசோலையில் குறிப்பிட்டுள்ள பணம் உடனடியாக வழங்கப்படும்
இத்தகைய வசதி கொண்டஇந்த காசோலைகளை, முழு அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பொருட்டு, அனைத்து வங்கிகளும், வாடிக்கையாளர்களிடம் உள்ள பழைய காசோலைகளை திரும்பப் பெற்று வருகின்றன. நடப்பாண்டு, ஜனவரி முதல் "சி.டி.எஸ்-2010' காசோலைகள் நடைமுறை அமலுக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.
பின்னர் இது, நடப்பு மார்ச் 31ம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டது.தற்போது, வங்கி வட்டாரத்தில், பழைய காசோலைகளின் புழக்கம் அதிகம் உள்ளதை கருத்தில் கொண்டு, புதிய காசோலைகளை நடைமுறைபடுத்துவதற்கான காலக் கெடு, மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல், பழைய காசோலைகளை வங்கிகள் ஏற்காது என்றும், சி.டி.எஸ்-2010' தொழில்நுட்ப வசதி கொண்ட காசோலைகள் மட்டுமே ஏற்கப்படும் என, ரிசர்வ் வங்கி உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கட்டணம்: வங்கிகள்,சேமிப்புகணக்கு வாடிக்கையாளர்களுக்கு, முதன்முறையாகவழங்கும் புதிய காசோலை களுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்க கூடாது என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
மேலும், மின்னணு பணப்பட்டுவாடா சேவைகள் (இ.சி.எஸ்.,) வசதி கொண்ட வங்கிக் கிளைகள், பழைய அல்லது புதிய காசோலைகளை வாடிக்கையாளர்களிடம் ஏற்கக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன் மூலம் இ.சி.எஸ்., பயன்பாடு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|