பதிவு செய்த நாள்
20 மார்2013
00:54

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் செவ்வாய் கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து, தி.மு.க., விலகுவதாக அறிவித்தது. இதையடுத்து, மத்திய அரசின் ஸ்திரத்தன்மை குறித்த அச்சப்பாட்டால், பங்குச் சந்தைகளில் வர்த்தகம் வீழ்ச்சி கண்டது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைத்தது. இது, பங்குச் சந்தைகளில், எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.வங்கி டெபாசிட்டுகளுக்கு வரி விதிப்பது தொடர்பாக, சைப்ரஸ் அரசு, பார்லிமென்டில் ஓட்டெடுப்பு நடத்த உள்ளது.
இதையடுத்து, ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் காணப்பட்டது. இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் ஏற்ற, இறக்கத்துடனேயே இருந்தது.
நேற்றைய வர்த்தகத்தில், ரியல் எஸ்டேட், பொறியியல், உலோகம் உள்ளிட்ட, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 285.10 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 19,008.10 புள்ளிகளில் நிலை கொண்டது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிபட்சமாக, 19,378.61 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 18,939.47 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், பீ.எச்.இ.எல்., பார்தி ஏர்டெல், ஜிந்தால் ஸ்டீல் உள்ளிட்ட, 24 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், கெயில், பஜாஜ் ஆட்டோ, சன்பார்மா உள்ளிட்ட, 6 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 89.30 புள்ளிகள் சரிவடைந்து, 5,745.95 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,863.60 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,724.30 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|