கோல் இந்தியா: நிலக்கரிஉற்பத்தி இலக்கு 48.20 கோடி டன்கோல் இந்தியா: நிலக்கரிஉற்பத்தி இலக்கு 48.20 கோடி டன் ... உள்நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் சரிவு உள்நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் சரிவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
காப்பீட்டு பிரிமியம் வசூலில் எல்.ஐ.சி., பங்களிப்பு குறைகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2013
01:23

மும்பை:ஆயுள் காப்பீட்டு துறையில், ஒட்டுமொத்த பிரிமியம் வசூலில், பொதுத் துறையை சேர்ந்த எல்.ஐ.சி., நிறுவனத்தின் பங்களிப்பு குறைந்து கொண்டு வருகிறது.நடப்பு, 2012-13ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான, 11 மாதங்களில், எல்.ஐ.சி., நிறுவனத்தின் ஒட்டுமொத்த பிரிமியம் வருவாய், 61.4 சதவீதமாக குறைந்துள்ளது.
குழு காப்பீடு:இது, சென்ற 2011-12ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூன் வரை
யிலான காலத்தில், 67.9 சதவீதமாக இருந்தது.ஒட்டுமொத்த பிரிமியத்தில், மொத்த பிரிமியம், தவணை வகையிலான பிரிமியம், குழு காப்பீட்டில் ஒரு முறை மற்றும் தவணையில் செலுத்தும் பிரிமியம் உள்ளிட்டவை அடங்கும். காப்பீட்டு பிரிமியம் சந்தையில், மாதந்தோறும், எல்.ஐ.சி.,யின் பங்களிப்பு குறைந்து வருகிறது. சென்ற பிப்ரவரியில், எல்.ஐ.சி.,யின் பிரிமியம் வசூல், 55.5 சதவீதமாக குறைந்து உள்ளது. இது, முந்தைய ஜனவரியில், 58.5 சதவீதமாக இருந்தது.
ஆனால், இதே பிப்ரவரியில், தனியார் துறையை சேர்ந்த, பஜாஜ் அலையன்ஸ், எச்.டீ.எப்.சி., லைப் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பிரிமியம் வருவாய் உயர்ந்துள்ளது.ஆண்டுக்கணக்கில், எஸ்.பீ.ஐ. லைப் இன்சூரன்ஸ், எச்.டீ.எப்.சி. லைப் இன்சூரன்ஸ், பஜாஜ் அலையன்ஸ் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்ஷியல் லைப் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பிரிமியம் வருவாய் உயர்ந்துள்ளது.ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில், பிரிமியம் வருவாயை பொறுத்தவரை, எஸ்.பீ.ஐ., லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, 3.9 சதவீதத்தில் இருந்து, 4.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.இதே காலத்தில், பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, 2.9 சதவீதத்தில் இருந்து, 3.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, 6.4 சதவீதத்தில் இருந்து, 7.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பிரிமியம் வ‹ல்:மதிப்பீட்டு காலத்தில், எல்.ஐ.சி.,யின் குழு காப்பீட்டில், தவணை முறையிலான பிரிமியம் வசூல், 1,635 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில், 10,340 கோடி ரூபாயாக இருந்தது. இதன் காரணமாகவே, பிரிமியம் வசூலில், எல்.ஐ.சி.,யின் சந்தை பங்களிப்பு குறைந்துள்ளது. இதே காலத்தில், எல்.ஐ.சி.,யின் புதிய பிரிமியம் வருவாய், 64,820 கோடி ரூபாயில் இருந்து, 60,723 ரூபாயாக குறைந்து உள்ளது. இதே காலத்தில், தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் தவணை முறையிலான பிரிமியம் வசூல், 3,846 கோடியில் இருந்து 2,945 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
Œந்தை பங்களிப்பு:குழு காப்பீட்டு பிரிமியம் குறைந்த போதிலும், இதர தனியார் காப்பீட்டு நிறுவனங்களை விட, பாலிசி புதுப்பித்தல் சார்ந்த சேவைகள், காப்பீடு கோருதல் பிரிவுகளில் எல்.ஐ.சி., நிறுவனம் சிறந்து விளங்குகிறது.ஆயுள் காப்பீட்டு துறையின் ஒட்டுமொத்த பிரிமியம் வசூலில், எல்.ஐ.சி.,யின் பங்களிப்பு, 70 சதவீதமாக உள்ளது. என, பார்க்லேஸ் கேப்பிடல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)