பதிவு செய்த நாள்
28 மார்2013
23:10
கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில், நெய் மீன் என்றழைக்கப்படும், சீலா மீன் கருவாடு, கிலோ 1,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால், அசைவ பிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மீன் வகைகளில் மிகவும் ருசியானது சீலா. கீழக்கரை சீலா மீன் கருவாட்டிற்கு வெளிநாடுகளில் கிராக்கி அதிகம். கிலோ, 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட சீலா மீன் வரத்து குறைந்ததால், சென்னை, ஆந்திராவில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.சீலா மீன், கருவாடாக பதப்படுத்தப்பட்டு, கிலோ 1,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. குறிப்பிடத்தக்க அளவிற்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.
இதுகுறித்து, கீழக்கரை மீனவர் அட்டப்பா கூறுகையில், "சீலா மீன் சீசன் முடிந்து விட்டதால், வரும் மாதங்களில் இந்த மீன் மற்றும் கருவாடு விலை மேலும் உயர வாய்ப்புள்ளது' என்றார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|