வெளி சந்தையில் 1 கோடி டன் சர்க்கரைவிற்பனை செய்ய ஆலைகளுக்கு அனுமதிவெளி சந்தையில் 1 கோடி டன் சர்க்கரைவிற்பனை செய்ய ஆலைகளுக்கு அனுமதி ... நலிந்த கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.72.08 கோடி நிதி ஒதுக்கீடு நலிந்த கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.72.08 கோடி நிதி ஒதுக்கீடு ...
வர்த்தகம் » ஜவுளி
திருப்பூர் பின்னலாடை துறை எழுச்சி பெறுகிறது 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்றுமதியில் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2013
02:59

கடந்த மூன்று நிதியாண்டுகளாக, சோதனை பல கண்ட, திருப்பூர் பின்னலாடை துறை, நடப்பு ஆண்டில், மீண்டும் எழுச்சிப் பாதையில் நடைபோடத் துவங்கிஉள்ளது.
சோதனை:சென்னையில் இருந்து, 450 கி.மீ., தொலைவில் உள்ள திருப்பூர், நாட்டின் பின்னலாடை மையம் என்ற சிறப்பை பெற்றது. ஆண்டுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் மேற்கொண்டு வந்த திருப்பூர் பின்னலாடை துறை, சர்வதேச பொருளாதார நெருக்கடியால், கடும் சோதனையை சந்திக்க நேர்ந்தது.

இத்துடன் மின்வெட்டு, தொழிலாளர் பிரச்னை என, பல சிக்கல்கள் சேர்ந்து கொள்ள, திருப்பூர் பின்னலாடை தொழில் நலிவடைந்தது. குறிப்பாக, அன்னியச் செலாவணியை அதிகம் ஈட்டித் தரும், பின்னலாடை ஏற்றுமதி பாதிக்கப்பட்டது.இதனிடையே, வங்கதேசம், சீனா ஆகிய நாடுகளின் மலிவு விலை ஜவுளிகள், சர்வதேச சந்தையில், திருப்பூர் ஜவுளித் துறைக்கு கடும் போட்டியை உருவாக்கின.கடந்த 2009-10ம் நிதியாண்டில், பின்னலாடை ஏற்றுமதி, 10 -15 சதவீதம் வீழ்ச்சி கண்டது. 2011-12ம் நிதியாண்டில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர்வு காரணமாக, ஏற்றுமதி வளர்ச்சி, ஏற்ற, இறக்கமின்றி காணப்பட்டது.
கடந்த 2006-07ம் நிதியாண்டில், 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பின்னலாடை வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டது. இதை, 2012ம் ஆண்டிற்குள், 21,800 கோடி ரூபாய் (400 கோடி டாலர்) அளவிற்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், 15 ஆயிரம் கோடி ரூபாய் (275 கோடி டாலர்) அளவிற்கே எட்டியிருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச மந்தநிலை, ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி, மின்சாரம், நூலிழை, சரக்கு போக்குவரத்து, டீசல் உள்ளிட்டவற்றின் விலையேற்றம் மற்றும் சாயப்பட்டறைகள் மூடப்பட்டது போன்றவற்றால், கடந்த 2008ம் ஆண்டிற்கு பிறகு, திருப்பூர் பின்னலாடை துறை கடுமையாக பாதிக்கப்பட்டது.

புதிய சந்தைகள்:"இந்நிலையில், நடப்பு ஆண்டு, ஜனவரியில் இருந்து ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரிக்கத் துவங்கியுள்ள. குறிப்பாக, பாரம்பரிய சந்தைகளுடன், புதிய சந்தைகளில் இருந்தும் ஆர்டர்கள் கிடைத்து வருவதால், இத்துறை, எழுச்சி காண்பதற்கான அறிகுறி தென்படுகிறது' என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் ஏ.சக்திவேல் தெரிவித்தார்.கடந்த மூன்று மாதங்களில், லாப வரம்பு குறைந்துள்ள போதிலும், பின்னலாடை ஏற்றுமதி, 5 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

கடந்த ஓரிரண்டு ஆண்டுகளில், ஜப்பான், தென் ஆப்ரிக்கா, இஸ்ரேல், தென் அமெரிக்கா ஆகிய புதிய சந்தைகள் கண்டறியப்பட்டுள்ளன. மின்வெட்டு:இச்சந்தைகளின் பங்களிப்பால், பின்னலாடை ஏற்றுமதி, சற்றே வளர்ச்சி கண்டுள்ளதாக, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.பாரம்பரிய சந்தைகளுடன், புதிய சந்தைகளில் இருந்தும் ஆர்டர்கள் குவிவதால், வரும் 2013-14ம் நிதியாண்டில், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி, 14 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம், மின்வெட்டு மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை ஆகியவை தான், தற்போது ஜவுளி துறைக்கு முக்கிய பிரச்Œனையாக உள்ளன.திருப்பூரில், நாள்தோறும் 7 - 8 மணி நேரம் மின் வெட்டு உள்ளது. இரவில், இரண்டு மணிக்கு ஒரு முறை, ஒரு மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனால், திட்டமிட்டபடி, பின்னலாடை உற்பத்தியை மேற்கொள்ள முடியாமல் உள்ளதாக, இத்துறையை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.மேற்கண்ட பிரச்சனைகளால், ஆர்டரின் பேரில் பின்னலாடைகளை சப்ளை செய்வது, சராசரியாக, 10 -15 நாட்கள் தாமதமாகிறது. இதையும் சமாளித்து, வாடிக்கையாளர் கேட்கும் நாளில், சரக்கை அனுப்ப வேண்டுமென்றால், கூடுதல் செலவாகும் என, அவர் மேலும் கூறினார்.

ஒப்பந்தம்: இந்திய ஜவுளித் துறையின் ஏற்றுமதியில், ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு, 50 சதவீத அளவிற்கு உள்ளது. இந்நாடுகள், பொருளாதார நெருக்கடியில் இருந்து முற்றிலும் விடுபடும்பட்சத்தில், இந்திய ஜவுளித் துறையின் ஏற்றுமதி அதிகரிக்கும் என,தெரிகிறது. மேலும், இந்தியாவுக்கும், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்கும் இடையிலான, தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் எந்தநேரத்திலும் மேற்கொள்ளப்படலாம் என, தெரிகிறது. அதன் பின்னர், ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் என, இத்துறை சார்ந்தவர்கள் கூறினர்.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)