பதிவு செய்த நாள்
01 ஏப்2013
00:30

புதுடில்லி:இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் வகையில், 3,300 கி.மீ., சரக்கு ரயில் பாதை அமைப்பதற்காக, 11 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.ஒன்பது மாநிலங்களில், 60க்கு மேற்பட்ட மாவட்டங்கள் வழியாக, சரக்கு ரயில் பாதை அமைய உள்ளது. ஏற்கனவே உள்ள ரயில் பாதையை ஒட்டி, 80 சதவீத சரக்கு ரயில் பாதை அமைக்கப்படும். எஞ்சிய 20 சதவீத, ரயில் பாதை, புதிய பகுதிகளில் அமைக்கப்படும்.இதற்காக, நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.
இந்தவகையில், நடப்பாண்டில் மொத்தம் 4,217 கோடி ரூபாய் அளவிற்கு, நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட உள்ளது.சரக்கு ரயில் பாதை அமைக்க, நிலங்களை கையகப்படுத்திய வகையில், இதுவரை, நில உரிமையாளர்களுக்கு, 3,160 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில், நடப்பாண்டில் மட்டும், இதுவரை, 2,000 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.இத்துடன், மேற்கண்ட பகுதிகளில் வாழும், 1 லட்சம் பேரை, மறுகுடியமர்த்தும் பணிகளையும், நடப்பாண்டிற்குள் முடிக்க ரயில்வே துறை திட்டமிட்டு உள்ளது.நாடு விடுதலை அடைந்த பிறகு, முதன் முறையாக, இந்திய ரயில்வே, இத்தகைய மிகப் பெரிய திட்டத்தை மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரயில்வே துறை, டீ.எப்.சி.சி., என்ற துணை நிறுவனத்தின் வாயிலாக, கிழக்கு - மேற்கு இணைப்பு சரக்கு ரயில் பாதை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்திற்கு, உலக வங்கியும், ஜப்பான் சர்வதேச கூட்டுறவு அமைப்பும் நிதியுதவி வழங்குகின்றன.இருந்தபோதிலும், நிலங்களை கையகப்படுத்துவதற்கான இழப்பீட்டை, நில உரிமையை பெறும், ரயில்வே துறையே வழங்குகிறது.இத்திட்டத்தின் கீழ், 90 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட பின்னரே, ரயில் பாதை அமைப்பதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்படும் என, டீ.எப்.சி.சி., நிர்வாக இயக்குனர் ஆர்.கே.குப்தா தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|