சேமிப்பு கிடங்கு பற்றாக்குறையால் கோதுமை ஏற்றுமதியை அதிகரிக்க முடிவுசேமிப்பு கிடங்கு பற்றாக்குறையால் கோதுமை ஏற்றுமதியை அதிகரிக்க முடிவு ... புதிய பங்கு வெளியீடுகள்: திரட்டிய தொகை ரூ.6,059 கோடி:சென்ற 2012-13ம் நிதி ஆண்டில்... புதிய பங்கு வெளியீடுகள்: திரட்டிய தொகை ரூ.6,059 கோடி:சென்ற 2012-13ம் நிதி ஆண்டில்... ...
மோட்டார் வாகனங்கள் விற்பனையில் சுணக்க நிலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2013
00:46

துடில்லி:கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, சென்ற மார்ச் மாதத்தில், முன்னணியில் உள்ள பல நிறுவனங்களின் வாகன விற்பனையில் சுணக்க நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை மற்றும் இதர உள்நாட்டு நிலவரங்களால், வாகன விற்பனை சந்தை சூடுபிடிக்காமல் உள்ளது.
குறிப்பாக, வாகன கடனுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருப்பது, எரிபொருள் விலை உயர்வு மற்றும் நிச்சயமற்ற அரசியல் தன்மை ஆகியவை, மோட்டார் வாகன உற்பத்தியாளர்களை வெகுவாக பாதித்து உள்ளது என, ஜெனரல் மோட்டார்ஸ், இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் பி.பாலேந்திரன் தெரிவித்துள்ளார்.எனினும், நீண்ட கால அடிப்படையில், கடனுக்கான வட்டி விகிதங்கள் குறையும் நிலையில், வாகன விற்பனை சந்தை சூடுபிடிக்கும் என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.ஹூண்டாய் மோட்டார்:நாட்டின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான, ஹூண்டாய் மோட்டார் இந்தியா, நடப்பாண்டு மார்ச் மாதத்தில், 56,437 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை (59,229 வாகனங்கள்) விட, 4.71 சதவீதம் சரிவாகும்.மதிப்பீட்டு மாதத்தில், உள்நாட்டில், இந்நிறுவனத்தின் கார் விற்பனை, 13.46 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 39,122 என்ற எண்ணிக்கையிலிருந்து, 33,858 ஆக சரிவடைந்துள்ளது.
அதேசமயம், இந்நிறுவனத்தின் கார் ஏற்றுமதி, 12.29 சதவீதம் வளர்ச்சி கண்டு, 20,107 லிருந்து, 22,579 ஆக அதிகரித்துள்ளது.டி.வி.எஸ் மோட்டார்:இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம், நடப்பு 2013ம் ஆண்டு மார்ச் மாதத்தில், ஒட்டு மொத்த அளவில், 1,67,583 வாகனங்களை விற்பனை செய்து உள்ளது. இது, கடந்த 2012ம் ஆண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப் பட்ட விற்பனையை (1,82,527 வாகனங்கள்) விட, 8.18 சதவீதம் சரிவாகும்.மதிப்பீட்டு மாதத்தில், இந்நிறுவனத்தின் இருசக்கர வாகனங் களின் மொத்த விற்பனை, 1,80,274 லிருந்து, 1,62,507 ஆக சரிவடைந்துள்ளது. உள்நாட்டில், இந்நிறுவனம், விற்பனை செய்த இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை, 1,60,736 என்ற எண்ணிக்கையிலிருந்து, 1,43,239 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.மேலும், இந்நிறுவனத்தின் ஸ்கூட்டர் விற்பனையும், 39,395 லிருந்து, 29,261 ஆக சரிவடைந்து உள்ளது.அதேசமயம், இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த வாகன ஏற்றுமதி, 12.8 சதவீதம் அதிகரித்து, 20,690 என்ற எண்ணிக்கையிலிருந்து, 23,342 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.இருப்பினும், இந்நிறுவனத்தின் இருசக்கர வாகன ஏற்றுமதி, 19,538லிருந்து, 19,268 ஆக குறைந்துள்ளது. என்றாலும், மூன்றுசக்கர வாகன பிரிவில், இதன் ஏற்றுமதி இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரித்து, அதாவது, 2,253 லிருந்து, 5,076 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.போர்டு இந்தியா:கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும், போர்டு இந்தியா நிறுவனம், சென்ற மார்ச் மாதத்தில், ஒட்டு மொத்த அளவில், 7,499 வாகனங் களை விற்பனை செய்துள்ளது.
இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 12,150 ஆக அதிகரித்து காணப்பட்டது. ஆக, இந்நிறுவனத்தின் கார் விற்பனை, 38 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.உள்நாட்டில், இந்நிறுவனத்தின் கார் விற்பனை, 41.61 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 9,028 என்ற எண்ணிக்கையிலிருந்து, 5,217 ஆக சரிவடைந்துள்ளது. இதே போன்று, இந்நிறுவனத்தின் கார் ஏற்றுமதியும், 28.64 சதவீதம் சரிவடைந்து, 3,122 லிருந்து, 2,228 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.
ஜெனரல் மோட்டார்ஸ்:சென்ற மார்ச் மாதத்தில், ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின், வாகன விற்பனை, 14.94 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 10,588 என்ற எண்ணிக்கையிலிருந்து, 9,006 ஆக சரிவடைந்து உள்ளது.மகிந்திரா;மோட்டார் வாகன துறையில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான, மகிந்திரா அண்டு மகிந்திரா, சென்ற மார்ச் மாதத்தில், 51,904 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை (46,919 வாகனங்கள்) விட, 10.62 சதவீதம் அதிகமாகும்.உள்நாட்டில், இந்நிறுவனத்தின் வாகன விற்பனை, 11.22 சதவீதம் வளர்ச்சி கண்டு, 44,260 லிருந்து, 49,225 ஆக அதிகரித்துள்ளது.அதேசமயம், மதிப்பீட்டு மாதத்தில், இந்நிறுவனத்தின் மூன்று சக்கர வாகன விற்பனை, 5.07 சதவீதம் சரிவடைந்து, 5,089 என்ற எண்ணிக்கையிலிருந்து, 4,831 ஆக குறைந்துள்ளது.
இருப்பினும், இந்நிறுவனத்தின், நான்கு சக்கர வர்த்தக வாகன விற்பனை, 17.12 சதவீதம் உயர்ந்து, 14,696 லிருந்து, 17,212 ஆக உயர்ந்துள்ளது. இதே போன்று, இந்நிறுவனத்தின் வாகன ஏற்றுமதியும், 2,659 என்ற எண்ணிக்கையிலிருந்து, 2,679 ஆக சற்று அதிகரித்துள்ளது.இந்தியா யமஹா:இருசக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வரும், இந்தியா யமஹா மோட்டார், சென்ற மார்ச் மாதத்தில், 50,473 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை (41,886 வாகனங்கள்) விட, 21 சதவீதம் அதிகமாகும். மதிப்பீட்டு மாதத்தில், உள்நாட்டில், இந்நிறுவனத்தின் வாகன விற்பனை, 20 சதவீதம் அதிகரித்து, 29,819லிருந்து, 35,782 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்நிறுவனத்தின் வாகன ஏற்றுமதியும், 21.75 சதவீதம் வளர்ச்சி கண்டு, 12,067 என்ற எண்ணிக்கையிலிருந்து, 14,691 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)