புதிய பங்கு வெளியீடுகள்: திரட்டிய தொகை ரூ.6,059 கோடி:சென்ற 2012-13ம் நிதி ஆண்டில்...புதிய பங்கு வெளியீடுகள்: திரட்டிய தொகை ரூ.6,059 கோடி:சென்ற 2012-13ம் நிதி ஆண்டில்... ... உள்நாட்டு விமான பயணிகள்எண்ணிக்கை குறைந்தது உள்நாட்டு விமான பயணிகள்எண்ணிக்கை குறைந்தது ...
முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி 2.5 சதவீதமாக பின்னடைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2013
00:50

புதுடில்லி:நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தில், நாட்டின் முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி, மைனஸ், 2.5 சதவீதமாக பின்னடைவை கண்டு உள்ளது. அதேசமயம், கடந்த, 2012ம் ஆண்டின் இதே மாதத்தில், எட்டு துறைகளின் உற்பத்தி, 7.7 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருந்தது.கச்சா எண்ணெய் இயற்கை எரிவாயு, நிலக்கரி, மின்சாரம், கச்சா எண்ணெய் ஆகிய துறைகளின் உற்பத்தி, மிகவும் பின்னடைவை கண்டுள்ளன.
இதையடுத்து, ஒட்டு மொத்த அளவில், முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி சரிவடைந்துள்ளதாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.கடந்த, 2012-13ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான, 11 மாத காலத்தில், முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, 2.6 சதவீதமாக சரிவடைந்துள்ளது.
முந்தைய, 2011-12ம் நிதியாண்டின், இதே காலத்தில், இத்துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, 5.2 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது.நிலக்கரி:சென்ற பிப்ரவரியில், நிலக்கரி உற்பத்தி, மைனஸ், 8 சதவீதமாக சரிவடைந்து உள்ளது. அதேசமயம், கடந்த, 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், இத்துறையின் வளர்ச்சி, 18 சதவீதம் என்ற அளவில் உயர்ந்திருந்தது.சென்ற பிப்ரவரியில் கச்சா எண்ணெய் உற்பத்தி, மைனஸ் 4 சதவீதமாக பின்னடைவை கண்டுள்ளது. அதேசமயம், கடந்த ஆண்டு, இதே மாதத்தில், இத்துறை, 0.3 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருந்தது.கணக்கீட்டு மாதத்தில், இயற்கை எரிவாயு உற்பத்தி, மைனஸ், 7.6 சதவீதத்தில் இருந்து, மைனஸ், 20.1 சதவீதம் என்ற அளவில், மிகவும் பின்னடைந்துள்ளது.சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி வளர்ச்சி, 6 சதவீதத்திலிருந்து, 4.3 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது. உரத் துறையின் உற்பத்தி சென்ற பிப்ரவரியில், மைனஸ், 4 சதவீதம் என்ற அளவில், பின்னடைவை கண்டுள்ளது.
அதேசமயம், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், இத்துறையின் உற்பத்தி, 4.1 சதவீதம் என்ற அளவில், வளர்ச்சி கண்டிருந்தது.கணக்கீட்டு மாதத்தில், உருக்கு உற்பத்தி வளர்ச்சி, 8.7 சதவீதம் என்ற அளவிலிருந்து, 0.5 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது.சிமென்ட் உற்பத்தி:சிமென்ட் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 9.8 சதவீதம் என்ற அளவிலிருந்து, 3.9 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது.நடப்பாண்டு பிப்ரவரியில், மின் துறையின் உற்பத்தி, மைனஸ், 4.1 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டுள்ளது. அதேசமயம், கடந்த ஆண்டு இதே மாதத்தில், இத்துறையின் உற்பத்தி வளர்ச்சி, 8.6 சதவீதம் என்ற அளவில் இருந்தது, என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)