பதிவு செய்த நாள்
22 ஏப்2013
01:36

புதுடில்லி:இந்திய நிறுவனங்கள், ஹாங்காங்கில் தொழிற்சாலைகளை அமைத்து, அங்கிருந்து பொருட்களை, சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு உள்ளன.ஏனெனில், சீனா மற்றும் ஹாங்காங் ஆகிய இரு நாடுகளுக்கிடையில், பரஸ்பர வர்த்தகத்தை அதிகரிக்கும் வகையில், வரி விதிப்பு இல்லாமல், 1,000 வகையான பொருட்களை ஏற்றுமதி செய்யும் வகையில் ஒப்பந்தம் அமலில் உள்ளது.இதை, சிறந்த வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ள இந்திய நிறுவனங்கள் திட்டமிட்டு உள்ளன.
இதன்படி, இந்திய நிறுவனங்கள், அதன் துணை நிறுவனங்கள் மற்றும் கூட்டுத் திட்டத்தின் மூலம், ஹாங்காங்கில் தொழிற்சாலைகளை அமைத்து, அதன் வாயிலாக, சீனாவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு உள்ளன.குறிப்பாக, ரசாயனம், வேளாண் பொருட்கள் மற்றும் மருந்து தொழிற்சாலைகளை, ஹாங்காங்கில் அமைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
சீனா, உலக நாடுகளிடம்இருந்து, 1.80 லட்சம் கோடி டாலர் (99 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்து கொள்கிறது. இதில், இந்தியாவின் பங்களிப்பு, 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.குறிப்பாக, சென்ற 2012-13ம் நிதியாண்டில், சீனாவிற்கான, இந்தியாவின் ஏற்றுமதி, 1,500 கோடி டாலர் (82,500 கோடி ரூபாய்) என்ற அளவில் உள்ளது. அதேசமயம், இந்தியா, சீனாவிலிருந்து மேற்கொண்ட இறக்குமதி, 5,500 கோடி டாலராக (3.02 லட்சம் கோடி ரூபாய்) உள்ளது. ஏற்றுமதியை காட்டிலும், இறக்குமதி அதிகமாக உள்ளதால், சீனாவுடனான, நம்நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 4,000 கோடி டாலர் (2.20 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவில் மிகவும் அதிகமாக உள்ளது.
சீன சந்தைகளில், இந்திய ரசாயனம், மருந்து, வேளாண் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு வளமான வர்த்தக வாய்ப்புகள் உள்ளன. எனினும், வரி மற்றும் வரியற்ற இனங்களே இப்பொருட்களின் ஏற்றுமதிக்கு மிகப் பெரிய தடை கற்களாக உள்ளன.சீன மற்றும் ஹாங்காங் நாடுகளுக்கிடையில், பொருட்களின் ஏற்றுமதிக்கு முழு வரி விலக்கு உள்ளது. இந்நிலையில், இந்திய நிறுவனங்கள், ஹாங்காங்கில் தொழிற்சாலை அமைத்து, சீனாவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதென்பது சிறப்பானதொரு முடிவாகும் என, வர்த்தக அமைச்சகத்தைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|