பதிவு செய்த நாள்
22 ஏப்2013
01:38

தமிழகத்தில், ஏழு பின்தங்கிய மாவட்டங்கள் மற்றும் கோழிப் பண்ணைகள் இல்லாத மண்டலங்களில், கோழிப் பண்ணைகள் அமைப்பதை ஊக்குவிக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.இதன்படி, குறிப்பிட்ட பகுதிகளில், கோழிப்பண்ணை தொகுப்புகள் உருவாக்கப்பட உள்ளன. கோழிப் பண்ணை அமைப்பதற்கான, திட்டச் செலவில், 25 சதவீதத்தை, தமிழக அரசு மானியமாக வழங்கும்.
பயிற்சி:ஒரு தனிநபர், கோழி வளர்ப்பு சார்ந்த ஒரு தொழிலுக்கு, ஒரு முறை மட்டும் மானியம் பெற தகுதி உடையவர் ஆவார். இத்திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு, தமிழ்நாடு கால்நடை மற்றும் பிராணிகள் அறிவியல் பல்கலைக்கழகம் மூலம், வர்த்தக ரீதியில் கோழி வளர்ப்பு மேற்கொள்வது குறித்து, ஐந்து நாள் பயிற்சி வழங்கப்படும்.
தற்போது, மத்திய அரசு, கோழிப்பண்ணை துணிகர முதலீட்டு நிதியத்தின் கீழ், தனி நபர்களுக்கு, நபார்டு வங்கி மூலம், 25 சதவீத மானிய உதவியை வழங்கி வருகிறது.இதனுடன் இணைந்து, நபார்டு மற்றும் பொதுத் துறை வங்கிகள் வாயிலாக, கோழிப்பண்ணை ஊக்குவிப்பு திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம்:தமிழகத்தில் உள்ள நாமக்கல் மாவட்டம், முட்டை ஏற்றுமதியில், நாட்டின் மிகப் பெரிய மையமாக விளங்குகிறது. இந்தியாவில், முட்டை உற்பத்தியில், தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.தமிழகத்தின் மேற்கு பகுதிகளில், கோழிப்பண்ணை விவசாயம், வர்த்தக ரீதியில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக, நாமக்கல் பகுதி, முட்டைக் கோழிகளுக்கும், பல்லடம் பிராந்தியம், கறிக்கோழிகளின் உற்பத்திக்கும், முக்கிய மையங்களாக விளங்குகின்றன.சென்ற நிதியாண்டில், தமிழகத்தின் முட்டை உற்பத்தி, முந்தைய நிதியாண்டை விட, 3 சதவீதம் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தமிழக அரசின் திட்டப்படி, பின்தங்கிய ஏழு மாவட்டங்களில், கோழிப்பண்ணை தொகுப்புகள் அமையும்பட்சத்தில், அது சார்ந்த வர்த்தகம் பரவலாகும். மேலும், பின் தங்கிய பகுதியை சேர்ந்த மக்களின் பொருளாதாரமும் வளர்ச்சி காணும்.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|