தங்கம் சவரனுக்கு ரூ.696 ரூபாய் உயர்வுதங்கம் சவரனுக்கு ரூ.696 ரூபாய் உயர்வு ... இயற்கை ரப்பர் விலை சரிவு இயற்கை ரப்பர் விலை சரிவு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
நாட்டின் தங்கம் இறக்குமதி12 சதவீதம் குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2013
00:23

புதுடில்லி:சென்ற, 2012-13ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான, 11 மாத காலத்தில், மதிப்பின் அடிப்படையில், நாட்டின் தங்கம் இறக்குமதி, 5,000 கோடி டாலராக (2.70 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது என, நிதி துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா தெரிவித்தார். இது, சென்ற 2011-12ம் நிதியாண்டின் இதே காலத்தில், 5,600 கோடி டாலராக (3.08 லட்சம் கோடி ரூபாய்) அதிகரித்து காணப்பட்டது.

மேலும் இது, கடந்த 2010-11ம் நிதியாண்டில், 4,000 கோடி டாலராகவும், 2009-10ம் நிதியாண்டில், 2,800 கோடி டாலராகவும் இருந்தது.ஆக, மதிப்பீட்டு காலத்தில், நாட்டின் தங்கம் இறக்குமதி, 11.80 சதவீதம் சரிவடைந்துள்ளது.தங்கத்திற்கான தேவையை குறைக்கும் வகையில், மத்திய அரசு, எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் விளைவாக, மதிப்பீட்டு காலத்தில், தங்கம் இறக்குமதி குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக, தங்கத்தை அதிகளவில், இந்தியா இறக்குமதி செய்து கொள்கிறது. சென்ற, 2011-12ம் நிதியாண்டில், ஒட்டு மொத்த இறக்குமதியில், தங்கத்தின் பங்களிப்பு, மதிப்பின் அடிப்படையில், 11.3 சதவீதம் என்ற அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)