பதிவு செய்த நாள்
23 மே2013
23:58

புதுடில்லி:உற்பத்தி செலவு அதிகரிப்பு மற்றும் விலை குறைவால், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-ஆக.,), சர்க்கரை ஆலைகளின் செயல்பாட்டு லாபம், குறைய வாய்ப்புள்ளது என, தரக்குறியீட்டு நிறுவனமான, "இக்ரா' தெரிவித்துள்ளது.
கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் ஏற்பட்ட வறட்சியால், கரும்பு உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், சர்க்கரை ஆலைகளில், கரும்பு அரவை குறைந்துள்ளது. அதேசமயம், உத்தரபிரதேசம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில், அதிகளவில் கரும்பு அரவைக்கு வந்து கொண்டுள்ளது.இருப்பினும், ஒட்டு மொத்த அளவில், சர்க்கரை ஆலைகளின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. அதேசமயம், இதன் விலை குறைந்து வருகிறது. இதன் காரணமாக, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், இத்துறை நிறுவனங்களின் லாப வரம்பு குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு, சர்க்கரை மீதான கட்டுப்பாட்டை, நீக்கியுள்ளது. இதனால், சர்க்கரை ஆலைகளின் ரொக்க வரத்து அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சர்க்கரையின் விலை குறைந்துள்ளது. இது, இந்நிறு வனங்களுக்கு இடர்பாட்டை ஏற்படுத்தும்.
நடப்பு பருவத்தில் (அக்.,-செப்.,), நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.40-2.45 கோடி டன்னாக இருக்கும்என, மதிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த 2011-12ம் பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.60 கோடி டன்னாக மிகவும் அதிகரித்திருந்தது.
இந்நிலையில், நடப்பு பருவத்தில், உள்நாட்டில் சர்க்கரைக்கான தேவை, 2.35 கோடி டன்னாக இருக்கும். இதையடுத்து, 50-60 லட்சம் டன் சர்க்கரை, உபரியாக இருக்கும். இது, மூன்று மாத தேவையை பூர்த்தி செய்யும் அளவாகும் என, "இக்ரா' நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|