பதிவு செய்த நாள்
27 மே2013
00:29

வரும் காபி பருவத்தில், நாட்டின் காபி உற்பத்தி, 3 லட்சம் டன்னுக்கும் குறைவாக, அதாவது, 2.75 லட்சம் டன்னாக சரிவடையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.உலகளவில், காபி உற்பத்தியில், இந்தியா, 6வது பெரிய நாடாக திகழ்கிறது. நாட்டின் மொத்த காபி உற்பத்தியில், பெரும் பகுதி ஏற்றுமதி செய்யப்படுகிறது. மதிப்பீடு :காபி உற்பத்தியில், கர்நாடகா மாநிலத்தின் பங்களிப்பு மிகவும் அதிகமாகும். வறட்சி காரணமாக, இம்மாநிலத்தில் வரும் காபி பருவத்தில் (அக்.,- செப்.,), இதன் உற்பத்தி, குறையும் என, பல்வேறு அமைப்புகள் மதிப்பீடு செய்துள்ளன.இருப்பினும், இந்திய காபி வாரியம், வரும் பருவத்தில், காபி உற்பத்தி குறித்த மதிப்பீட்டை, இன்னும் அறிவிக்கவில்லை.
அதேசமயம், காபி உற்பத்தியாளர்கள், கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, காபி உற்பத்தி, 3 லட்சம் டன்னிற்கும் குறைவாக இருக்குமென, மதிப்பீடு செய்துள்ளனர்.கர்நாடகா:கடந்த, 2007-08ம் ஆண்டில், நாட்டின் காபி உற்பத்தி, மிகவும் குறைந்தபட்சமாக, 2.62 லட்சம் டன் என்ற அளவில் இருந்தது. இதையடுத்து, 2010-11ம் பருவத்தில், காபி உற்பத்தி, 3.02 லட்சம் டன்னாகவும், 2011-12ம் பருவத்தில், 3.14 லட்சம்டன்னாகவும் இருந்தது. இது, நடப்பு பருவத்தில், 3.16 லட்சம் டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, கர்நாடகா காபி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் நிசாந்த் ஆர்.குர்ஜர் கூறியதாவது:கர்நாடக மாநிலத்தில், சிக்மகளூர், குடகு மற்றும் ஹாசன் ஆகிய மாவட்டங்களில் தான், காபி அதிகளவில் உற்பத்தியாகிறது. வழக்கமாக, மார்ச், 15ல் இருந்து ஏப்ரல் இறுதி வரை, காபி விளையும் பகுதிகளில், 8 - 10 அங்குல அளவிற்கு, "@ரவதி' மழை (கர்நாடகாவில் இப்படி அழைக்கப்படுகிறது) பெய்யும்.ஆனால் நடப்பாண்டு இந்த மழை பெ#யவில்லை. இதனால், காபி பூ பிடிக்கவும், காய்க்கவும் காலதாமதமாகிறது. கடந்த 1983ம் ஆண்டிற்கு பிறகு இத்தகைய நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், சிக்மகளூர் மாவட்டத்தில், கடந்த, 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குவெப்பமும் கடுமையாக உள்ளது. இதனால், இம்மாவட்டத்தில், காபி உற்பத்தி குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.ரோபஸ்டா வகை காபிவரும் பருவத்தில், மதிப்பீடு செய்யப்பட்டுள்ள, மொத்த காபி உற்பத்தியில், அராபிகா வகை காபி உற்பத்தி, 75 ஆயிரம் டன்னாகவும், ரோபஸ்டா வகை காபி உற்பத்தி, 1.90 லட்சம் டன்னாகவும் இருக்கும் என, தெரிகிறது. கடந்த, 2012-13ம் பருவத்தில், இவற்றின் உற்பத்தி முறையே, 80 ஆயிரம் டன் மற்றும் 2.15 லட்சம் டன் என்ற அளவில் இருந்தது.
இதுகுறித்து, இந்திய காபி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரமேஷ் ராஜா கூறியதாவது:வரும் பருவத்திற்கு, மதிப்பீடு செய்யப்பட்டுள்ள காபி உற்பத்தியில், மாறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பருவ மழை:குறிப்பாக, வரும் பருவத்தில், பருவ மழை நன்கு இருக்கும் நிலையில், காபி உற்பத்தி, மதிப்பீட்டு அளவை விட, உயர வாய்ப்புள்ளது. எனவே, காபி உற்பத்தி குறித்து, இப்போதே கூற முடியாது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.தற்போதைய முன்கூட்டிய மதிப்பீட்டின்படி, ரோபஸ்டா வகை காபி உற்பத்தி, குறையும் என்றும், அதேசமயம், அராபிகா வகை காபி உற்பத்தி, 85 ஆயிரம் டன் என்ற அளவில் இருக்கும். ஒட்டு மொத்த அளவில், காபி உற்பத்தி, 10 சதவீதம் குறைந்து, 3 லட்சம் டன்னுக்கும் குறைவாக இருக்குமென, குர்ஜர் தெரிவித்தார்.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|