பள்ளிப்பாட நோட்டுகள் 20 சதவீதம் விலை உயர்வுபள்ளிப்பாட நோட்டுகள் 20 சதவீதம் விலை உயர்வு ... "செயில்' நிறுவனம் கூடுதலாக60 லட்சம் டன் உருக்கு உற்பத்தி "செயில்' நிறுவனம் கூடுதலாக60 லட்சம் டன் உருக்கு உற்பத்தி ...
பிரிமியம் பெட்ரோல், டீசல் விற்பனை நிறுத்தப்படுமா?பயன்படுத்துவது குறைந்ததால்...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2013
00:31

பிரிமியம் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விற்பனை வெகுவாக குறைந்து விட்டதால், அவற்றின் தயாரிப்பை எண்ணெய் நிறுவனங்கள் கைவிடுமா என்ற @கள்வி எழுந்துள்ளது.பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.,), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பீ.பி.சி.எல்.,), இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (எச்.பி.சி.எல்.,) ஆகியவை, பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையை மேற்கொண்டு வருகின்றன.
ஆராய்ச்சிகள்:இந்நிறுவனங்கள், பல கோடி ரூபாய்முதலீட்டில், பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம், மேம்படுத்தப்பட்ட பெட்ரோல், டீசல் ஆகியவற்றை உருவாக்கின. இந்த பிரிமியம் வகை பெட்ரோலிய பொருட்கள், கடந்த 2002ம் ஆண்டு முதல் பிராண்டு பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.இவை, அதிக மை‌லேஜ், குறைந்த மாசுவெளியீடு, நீடித்த இன்ஜின் உழைப்பு, சொகுசான சவாரிக்கு உகந்தவை என, கூறப்பட்டது.இதனால், ஐ.ஓ.சி.,யின் "எக்ஸ்ட்ரா பிரிமியம்', பீ.பி.சி.எல்.,ன் "ஸ்பீடு', எச்.பி.சி.எல்.,ன் "பவர்' போன்ற பிரிமியம் வகை பெட்ரோலுக்கு, வாகன ஓட்டிகளிடம் வரவேற்பு காணப்பட்டது.
இதுபோன்ற வரவேற்பு, "எக்ஸ்ட்ராமைல்', "ஹை ஸ்பீடு' "டர்போஜெட்' என்ற பிரிமியம் டீசலுக்கும் கிடைத்தது.சாதாரண பெட்ரோல் மற்றும் டீசலுக்கும், பிரிமியம் வகைக்கும் இடையே, முறையே லிட்டருக்கு, 1.50 ரூபா# மற்றும் 0.25 - 0.75 பைசா என்ற அளவிற்கு தான் வித்தியாசம் இருந்தது.இதனால், பிரிமியம் பெட்@ரால், டீசல் விற்பனை சிறப்பாக இருந்தது. இந்நிலையில், 2008-09ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், பிரிமியம் பெட்ரோலியப் பொருள்களுக்கு, சிறப்பு வரி விதிக்கப்பட்டது.
விலை வித்தியாசம்:இதனால், ஒரு லிட்டர் சாதாரண பெட்ரோலுக்கும், பிரிமியம் வகை பெட்ரோலுக்கும் இடையிலான விலை வித்தியாசம், 2.50 ரூபாயாக உயர்ந்தது. இது, டீசலில், 4.95 ரூபாயாக அதிகரித்தது.இதனால், வாகன ஓட்டிகள், பிரிமியம் எரிபொருள்களின் பயன்பாட்டை குறைக்கத் துவங்கினர்.இந்நிலையில், 2012ம் ஆண்டு செப்டம்பரில், பிரிமியம் எரிபொருள்களுக்கு அளித்து வந்த மானிய உதவியை, மத்திய அரசு திரும்ப பெற்றது. இதையடுத்து, பிரிமியம் வகை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது.
விற்பனை:இதனால், இவற்றின் விற்பனை குறைந்தது. இவற்றை விட, விலை குறைந்த, சாதாரண பெட்ரோல், டீசலுக்கு வாகன ஓட்டிகள் மாறினர்.இதையடுத்து, எண்ணெய் நிறுவனங்கள், அவற்றின் பிரிமியம் வகை பெட்ரோலியப் பொருள்களின் உற்பத்தியை குறைத்தன.உதாரணமாக, 2007-08ம் நிதியாண்டில், ஐ.ஓ.சி., 15.03 லட்சம் லிட்டர் "எக்ஸ்ட்ராபிரிமியம்' பெட்ரோலை உற்பத்தி செய்து, 7,041 பெட்ரோல் நிலையங்கள் வாயிலாக விற்பனை செய்தது.இது, 2011-12ம் நிதியாண்டில், 5.19 லட்சம் லிட்டர் மற்றும் 3,421 பெட்ரோல் நிலையங்கள் என்ற அளவிற்கு குறைந்து விட்டது.
இ‌தே காலத்தில், "எக்ஸ்ட்ராமைல்' டீசல் உற்பத்தி, 33.67 லட்சம் லிட்டரில் இருந்து, 1.64 லட்சம் லிட்டராக சரிவடைந்து விட்டது. இவ்வகை டீசலை விற்பனை செய்யும் நிலையங்களின் எண்ணிக்கை, 10,477லிருந்து, 2,221 ஆக குறைந்து விட்டன.இதனிடை@ய, கடந்த ஐந்து ஆண்டுகளில், சாதாரண மற்றும் பிரிமியம் வகை பெட்ரோலுக்கு இடையிலான விலை வித்தியாசம், லிட்டருக்கு, 8 - 10 ரூபாயாக உயர்ந்து விட்டது.
இது, டீசலில், 16 ரூபாய்என்ற அளவிற்கு அதிகரித்து விட்டது.விற்பனை நிலையங்கள்இதே காலத்தில், ஐ.ஓ.சி.,யின் சாதாரண பெட்ரோல், டீசல் விற்பனையுடன் ஒப்பிடும்போது, பிரிமியம் பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை, 30 சதவீதத்தில் இருந்து, 8 -10 சதவீதமாக குறைந்து விட்டது.இதையடுத்து, ஐ.ஓ.சி., அதன் விற்பனை நிலையங்களில், "எக்ஸ்ட்ராமைல்' டீசல் விற்பனையை நிறுத்தி விட்டது. இதர நிறுவனங்களும், அவற்றின் பிரிமியம் வகை பெட்ரோலியப் பொருட்களின் விற்பனையில், இதே நடவடிக்கையை பின்பற்றும் என, தெரிகிறது.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)