பதிவு செய்த நாள்
08 ஜூன்2013
15:39
இன்டர்நேஷனல் ஜெனீவா மோட்டார் ஷோ என்ற சர்வதேச வாகன கண்காட்சி என்பது வாகன ரசிகர்கள் ஒவ்வொருவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒன்றாகும். இது ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதத்தில் ஸ்விஸ் நாட்டின் ஜெனீவாவில் நடைபெறுகிறது. 1905 ஆம் ஆண்டு முதல் நடைபெறும் இக்கண்காட்சியில் உலகின் எல்லா பெரிய கார் மாடல்களும், ஆராய்ச்சியில் உள்ள கார் டிசைன்களும், புதிய சாதனங்களும், புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளும், சர்வதேச வாகன உற்பத்தியாளரின் புதிய கூட்டுறவுகளும் என்று வருடந்தோறும் களைக்கட்டுகிறது இக்கண்காட்சி .ஜெனீவா மோட்டார் ஷோவில் பல பிரிவுகளில் அரங்கங்கள் அமைக்கப்படுகின்றன. மூன்று மட்டும் நான்கு சக்கரங்கள் கொண்ட மோட்டார் கார்கள்
* எலக்ட்ரிக் கார்கள் மற்றும் மாற்று எரிபொருள் கார்கள்
* கார்களின் புதிய வடிவங்கள், பொறியியல் நுட்பங்கள் மற்றும் வடிவமைப்புகள்.
* மாற்றியமைக்கப்படும் கார்கள்
* கார்களின் உதிரி மற்றும் துணை பாகங்கள்
* ஒரிஜினல் உதிரி பாகங்களின் உற்பத்தியாளர்களின் பங்கேற்பு.
* கார்களின் பராமரிப்பு மற்றும் பழுது தொடர்பான பட்டறைகள்
* வாகனத்துறை சம்பந்தமான மற்ற பொருட்கள் மற்றும் சேவைகள்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|