பதிவு செய்த நாள்
09 ஜூன்2013
00:34

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரண்டு மாத காலத்தில், நாட்டின் நிகர நேரடி வரி வசூல், 37,596 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 35,322 கோடி ரூபாயாக இருந்தது. ஆக, நாட்டின் நிகர நேரடி வரி வசூல், 6.44 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
இதே காலத்தில், மொத்த நேரடி வரி வசூல், 21.10 சதவீதம் அதிகரித்து, 52,231 கோடி ரூபாயிலிருந்து, 63,252 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.நாட்டின் நேரடி வரி வசூலில், நிறுவனங்கள் செலுத்தும் வரி, தனிநபர் வருமான வரி, பங்குபரிவர்த்தனை வரி, செல்வ வரி உள்ளிட்டவை அடங்கும்.
மதிப்பீட்டு காலத்தில், நிறுவனங்கள் செலுத்திய வரி, ஒட்டு மொத்த அளவில், 14.91 சதவீதம் வளர்ச்சி கண்டு, 24,329 கோடி ரூபாயிலிருந்து, 27,957 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.இதே போன்று, மொத்த தனிநபர் வருமான வரி வசூல், 34,805 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்தாண்டு இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட வரி வசூலை (27,343 கோடி ரூபாய்) விட, 27.29 சதவீதம் அதிகமாகும்.
கணக்கீட்டு காலத்தில், பங்குச் சந்தை நிலவரம் நன்கு இல்லாத காரணத்தால், பங்கு பரிவர்த்தனை வரி வசூல், 14.63 சதவீதம் சரிவடைந்து, 540 கோடி ரூபாயிலிருந்து, 461 கோடி ரூபாயாக குறைந்து உள்ளது.அதேசமயம், செல்வ வரி வசூல், மிக அதிகளவாக, 85.67 சதவீதம் வளர்ச்சி கண்டு, 15 கோடியிலிருந்து, 28 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|