பதிவு செய்த நாள்
11 ஜூன்2013
16:09

புதுடில்லி : மே மாதத்திற்கான கார் மற்றும் பைக்குகள் விற்பனை சரிந்துள்ளன. இதுகுறித்து இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே மாதத்தில் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 1,43,216 ஆகும். கடந்தாண்டு இதேகாலகட்டத்தில் கார்களின் விற்பனை 1,63,222 ஆக இருந்தது. இதன்மூலம் கார்கள் விற்பனை 12.26 சதவீதம் சரிந்துள்ளது.
இதேப்போல் வர்த்தகம் தொடர்பான வாகனங்கள் விற்பனையும் 10.6 சதவீதம் சரிந்து 55,458 ஆக உள்ளது. கடந்தாண்டு இதேகாலகட்டத்தில் 62,032 ஆக இருந்தது.
மோட்டார்சைக்களின் விபற்னையும் 0.72 சதவீதம் சரிந்து 8,81,288 ஆக உள்ளது. கடந்தாண்டு இதேகாலகட்டத்தில் 8,87,646 ஆக இருந்தது என்று கூறப்பட்டுள்ளது.
அதேசமயம் மொத்த இருசக்கர வாகனத்தின் விற்பனை 1.13 சதவீதம் உயர்ந்து 12,06,173 ஆகவும், கடந்தாண்டு இதேகாலகட்டத்தில் 11,92,700 ஆக இருந்தது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|