பதிவு செய்த நாள்
12 ஜூன்2013
00:08

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு, வரலாறு காணாத வகையில் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.நேற்று முன்தினம், ரூபாய் மதிப்பு, கிட்டத்தட்ட, 2 சதவீதம் வீழ்ச்சி அடைந்து, முதன் முறையாக, 58.14 ஆக சரிவடைந்தது.
இந்நிலையில்,நேற்றைய அன்னியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு,மேலும், 0.26 பைசா குறைந்து, 58.40 ஆக வீழ்ச்சி கண்டது. வர்த்தகத்தின் இடையே, ரூபாய் மதிப்பு, 58.90 வரை சரிந்தது. அப்@பாது, "இந்த நிலை இன்னும் மூன்று, நான்கு தினங்களில் மாறும். அதிக அளவில் அன்னிய முதலீடு குவியும். ரூபாய் மதிப்பின் சரிவு குறித்து கவலைப்படதேவையில்லை' என, பொருளாதார விவகாரங்கள் துறை செயலர், அரவிந்த் மயாராம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இத்தகவல் வெளியானதையடுத்து, ரூபாய் மதிப்பு கட்டுக்குள் வந்தது. அமெரிக்க டாலர் கையிருப்புகடந்த ஆறு வாரங்களில், ரூபாய் மதிப்பு, 10 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த ஜனவரி துவக்கத்தில், 53.68 ஆக இருந்த ரூபாய் மதிப்பு, வரும் நாட்களில், 59 ஐ தாண்டும் வாய்ப்பும் உள்ளது.பொதுவாக, உள்நாட்டில் டாலர் புழக்கம் குறையும்@பாது, ரூபாய் மதிப்பு சரிவடையும். இறக்குமதியாகும் கச்சா எண்ணெய், தங்கம் உள்ளிட்ட பொருள்களுக்கான தொகை, டாலரில் செலுத்தப்படுகிறது.இதனால் எண்ணெய் நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவை, அதிக அளவில் டாலரை வாங்குகின்றன. இதனால், டாலர் புழக்கம் குறைந்து, ரூபாய்க்கு நிகரான அதன் மதிப்பு உயர்கிறது.பொதுவாக, டாலருக்கு தட்டுப்பாடு ஏற்படும்போது, ரிசர்வ் வங்கி, அதன் கையிருப்பில் இருந்து, உடனடியாக டாலரை புழக்கத்தில் விடும். அப்போது, ரூபாய் மதிப்பின் சரிவு, கட்டுக்குள் வரும். ஆனால், தற்போதைய ரூபாய் மதிப்பின் சரிவை தடுக்க, ரிசர்வ் வங்கி இத்தகைய நடவடிக்கையை எடுக்கவில்லை.இதுகுறித்து, ரிசர்வ் வங்கி கவர்னர் டீ.சுப்பாராவ் கூறும்@பாது, "டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பிற்கு, எந்த இலக்கும் நிர்ணயிக்கப்படவில்லை' என்று தெரிவித்தார்.அதிக அளவில் டாலரை புழக்கத்தில் விடுவது, எந்த பயனையும் அளிக்காது என, ரிசர்வ் வங்கி கருதியது தான், இதற்கு காரணம். ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரித்துள்ளதால் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, 10 ஆயிரம்கோடி டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இந்திய கடன் பத்திர சந்தையில், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு,வேகமாக குறைந்து வருகிறது. இந்நிறுவனங்கள், இந்திய கடன் பத்திரங்கள் மற்றும் பங்குச் சந்தை முதலீடுகளை திரும்ப பெற்று, மீண்டும் பொருளாதார வளர்ச்சி காணத் துவங்கியுள்ள அமெரிக்காவில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளன.அதற்கேற்ப, அமெரிக்க கடன் பத்திரங்களின் மீதான முதலீட்டு வருவாய், கடந்த ஐந்து மாதங்களில், 1.8 சதவீதத்தில் இருந்து, 2.17 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதே காலத்தில், இந்திய கடன் பத்திர சந்தையில் இருந்து மட்டும், 23கோடி டாலர் அளவிலான முதலீட்டை திரும்ப பெற்றுள்ளன. அதிக அளவில் அன்னிய முதலீடு திரும்ப பெறப்பட்டு வருவதால், டாலர் புழக்கம் குறைந்து, ரூபாய் மதிப்பின் சரிவிற்கு வழி வகுத்துள்ளது.
மத்திய அரசு நடவடிக்கைஇந்நிலையில், மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு (செபி) ஆகியவை இணைந்து, ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்க முனைந்துள்ளன.இது குறித்து, தலைமை பொருளாதார ஆ@லாசகர் ரகுராம் ராஜன் கூறுகையில், "நடப்பு கணக்கு பற்றாக்குறையை சமாளிப்பதற்கான நிதியை திரட்டுவதில், நிலையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ரூபாய் மதிப்பும் நிலை பெறும். தற்போதைய ஏற்றத் தாழ்வு நீண்ட நாள் நீடிக்காது' என்று தெரிவித்தார்.நடப்பாண்டில், இதுவரை, அன்னிய நிதி நிறுவனங்கள், 1,100கோடி டாலரை முதலீடு செய்துள்ளன.இந்த முதலீடு நிலைத்திருக்க அல்லது அதிகரிக்க, ரிசர்வ் வங்கியை பொறுத்தவரை, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்கவேண்டும். அ@த சமயம், பணவீக்கத்தை கருத்தில் கொண்டு, இத்தகைய நடவடிக்கை எடுப்பது சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது.எனினும், இப்பிரச்னையை ரிசர்வ் வங்கி எப்படி சமாளிக்கப்போகிறது என்பது, வரும் 17ம்தேதி வெளியிட உள்ள அதன், நிதி ஆய்வு அறிக்கையில் தெரிய வரும்.
ரூபாய் மதிப்பின் சரிவிற்கு முக்கிய காரணங்கள்
ஏற்றுமதியை விட இறக்குமதி உயர்வால் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்து உள்ளது.கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் இறக்குமதி அதிகரித்து வருவதுஇந்திய இறக்குமதியாளர்கள் மற்றும் வங்கிகளுக்கு டாலருக்கான தேவை அதிகரிப்புசீனாவின் பொருளாதார வளர்ச்சியில்மந்த நிலைமே - ஜூன் 10 வரை, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய கடன் பத்திரங்களில் செய்திருந்த, 270 கோடி டாலர் முதலீட்டை திரும்ப பெற்றுள்ளனஅமெரிக்க கடன் பத்திரங்கள் மீதானமுதலீட்டில் கூடுதல் வருவாய் கிடைப்பதுஅமெரிக்க பெடரல் வங்கி, மாதந்தோறும் வாங்கும், 3,000 கோடி டாலர் மதிப்பிலான கடன் பத்திரங்களை, நடப்பாண்டு இறுதியில் நிறுத்தும் என்ற ஊகம்அமெரிக்காவில் பெருகும் வேலை வாய்ப்பு. - நமது நிருபர் -
நடப்பு கணக்கு பற்றாகுறையை சமாளிப்பதற்கான நிதியை திரட்டுவதில், நிலையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ரூபாய் மதிப்பும் நிலை பெறும். தற்போதைய ஏற்றத் தாழ்வு நீண்ட நாள் நீடிக்காது . ரகுராம் ராஜன் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் .
பண வீக்கம் அதிகரிக்கும்
உள்நாட்டில், பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும். அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வால், பண வீக்கம் அதிகரிக்கும்.கடந்த, 2009-10ம் நிதியாண்டில், நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி மதிப்பு, 4.09 லட்சம்கோடி ரூபாயாக இருந்தது. இது, 2011-12ம் நிதியாண்டில், 7.26 லட்சம்கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.நாட்டின் மொத்த ஏற்றுமதி வருவாயில், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம், 53 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
லாபமும், இழப்பும்ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால், மென்பொருள்சேவை மற்றும் ஏற்றுமதி சார்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் லாபம் அதிகரிக்கும்.ரூபாய் மதிப்பில் கூடுதல் தொகை தரவேண்டியுள்ளதால், கச்சா எண்ணெய், தங்கம், சமையல் எண்ணெய் உள்ளிட்ட அனைத்து பொருட்களை, இறக்குமதி செய்பவர்களுக்கு இழப்பு ஏற்படும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|