பதிவு செய்த நாள்
14 ஜூன்2013
01:27

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமையன்றும் மோசமாகவே இருந்தது. சர்வதேச நிலவரம் மற்றும் சில்லரை முதலீட்டாளர்கள், லாப நோக்கம் கருதி,அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது போன்றவற்றால், "சென்செக்ஸ்' 1.12 சதவீதம் சரிவடைந்து, மீண்டும் 19,000 புள்ளிகளுக்கும் கீழ் சென்றது.
நேற்றைய வியாபாரத்தில், மோட்டார் வாகனம், ரியல் எஸ்டேட், மின்சாரம்,மருந்து உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், நுகர்வோர் சாதனங்கள் துறையைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகளுக்கு மட்டும், ஓரளவிற்கு தேவை காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 213.97 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 18, 827.16 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிக பட்சமாக, 18,914.13 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,765.53 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டாட்டா மோட்டார்ஸ், மகிந்திரா, சன்பார்மா உள்ளிட்ட, 25 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், ஹிண்டால்கோ, பார்தி ஏர்டெல், ஜிந்தால் ஸ்டீல் உள்ளிட்ட, 5 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 61.10 புள்ளிகள் சரிவடைந்து, 5,699.10 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,729.85 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,683.10 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|