பதிவு செய்த நாள்
22 ஜூன்2013
06:02
சென்னை:நேற்று, தங்கம் விலை, சவரனுக்கு மேலும், 224 ரூபாய் குறைந்து, 20,288 ரூபாய்க்கு விற்பனையானது.
அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்வதால், சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் செய்துள்ள முதலீட்டை திரும்பப் பெற்று வருகின்றனர். இதனால், சில தினங்களாக தங்கம் விலை வெகுவாக குறைந்து வருகிறது.
சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,564 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,512 ரூபாய்க்கும் விற்பனையானது.
24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 27,420 ரூபாய்க்கு விற்பனையானது.இந்நிலையில், நேற்று, தங்கம் விலை, கிராமுக்கு, 28 ரூபாய் குறைந்து, 2,536 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 224 ரூபாய் சரிவடைந்து, 20,288 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 300 ரூபாய் குறைந்து, 27,120 ரூபாய்க்கு விற்பனையானது.ஒரு கிராம் வெள்ளி, 44.20 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 41,285 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து, தங்கம் ஆபரண வர்த்தகர் ஒருவர் கூறுகையில், "அமெரிக்காவின் எழுச்சியால், தங்கம் விலை இன்னும் குறைந்திருக்க வேண்டும். டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பில் ஏற்பட்ட சரிவால், விலை சற்றே குறைந்துள்ளது' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|