பதிவு செய்த நாள்
04 ஜூலை2013
00:11
சென்னை:ஆபரண தங்கம் விலை, நேற்று சவரனுக்கு, 32 ரூபாய் குறைந்து, 19,784 ரூபாய்க்கு விற்பனையானது.சர்வதேச நிலவரங்களால், நேற்று முன்தினம் அதிகரித்து காணப்பட்ட தங்கம் விலை, நேற்று சற்று குறைந்திருந்தது.
சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம், 2,477 ரூபாய்க்கும், ஒரு சவரன், 19,816 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 26,495 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், நேற்று தங்கம் விலை கிராமுக்கு, நான்கு ரூபாய் குறைந்து, 2,473 ரூபாய்க்கு விற்பனைஆனது. சவரனுக்கு, 32 ரூபாய் சரிவடைந்து, 19,784 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 45 ரூபாய் குறைந்து, 26,450 ரூபாய்க்கு விற்பனையானது.ஒரு கிராம் வெள்ளி, 43.60 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 40,740 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|