கோத்ரேஜ் பொருட்களின் விலை 5 சதவீதம் உயர்வுகோத்ரேஜ் பொருட்களின் விலை 5 சதவீதம் உயர்வு ... பொது துறை நிறுவனங்களிடம்ரூ.2.80 லட்சம் கோடி உபரி தொகை பொது துறை நிறுவனங்களிடம்ரூ.2.80 லட்சம் கோடி உபரி தொகை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பயணிக்க தூண்டும் பாங்கான பைக் ஹோண்டா சிபி டிரிக்கர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2013
17:21

ஹோண்டா மோட்டார் சைக்கிள் -ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடு சிபி டிரிக்கர் மோட்டார் சைக்கிள். நவீனமான வடிவமைப்புடன் தேவையான பல முக்கிய அம்சங்களை நிறைவாக கொண்டுள்ளது. இந்த ஸ்ட்ரீட் பைக் ஹோண்டாவின் 150சிசி யூனிகார்னின் சில அம்சங்களையும் CB1000R இன் சில ஸ்டைல் அம்சங்களையும் கொண்டுள்ளது CB டிரிக்கர்

தோற்றம்:
மஞ்சள் நிற பின்புற விளக்கு கொண்ட டிஜிட்டல் ஸ்பீடாமீட்டர், ஓடோமீட்டர், டிரிப் மீட்டர், டேகோ மீட்டர் போன்றவை மிகச்சிறந்த வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. லாவகமான பெட்ரோல் டாங்கின் வடிவமைப்பு கால் தொடைகளை வசதியாய் பொருத்தி சுகமாய் பயணிக்க வழிவகுக்கிறது. 6 ஸ்போக் கொண்ட அலாய் வீல்களும், பைக்கின் பெரும்பாலான பாகங்கள் கருப்பு நிறத்தில் இருப்பதும் இதன் தோற்றத்தை கம்பீரமாக்குகிறது.

இதன் என்ஜின் தினசரி உபயோகத்திற்கு தேவையான பவரையும் டார்க்கையும் வழங்குகிறது. இதன் கிளட்ச் சுலபமாக இயக்கும் வகையில் இருப்பதால் பயணம் சுகமாய் இருக்கிறது. இதன் 5 ஸ்பீட் கியர் பாக்ஸ் 1 டவுன் கியரும் 4 அப் கியரும் கொண்டு ஹீல் அன்ட் டோ ஷிப்ட் லீவர் மூலம் இயங்குகிறது. முன்புறம் டெலஸ்கோப்பிக் போர்க் மற்றும் பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் கொண்டு அதிர்வற்ற பயணத்தை வழங்குகிறது. நல்ல நீளமான சீட்டும், உயரம் சரியாக அமைக்கப்பட்ட ஹாண்டில்பாரும் ஓட்டுனருக்கு இதமான பயணத்தை வழங்குகிறது.

சிபிஎஸ் பிரேக்கிங்:
ஹோண்டாவின் தொழில்நுட்பமான கம்பைன்ட் பிரேக்கிங் சிஸ்டம் (சிபிஎஸ்) என்பதில் பின்புற பிரேக்கை போடும் போதெல்லாம் முன்புற பிரேக்கும் சேர்ந்து இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் கூடுதல் பாதுகாப்பு கிடைக்கிறது. சிபி டிரிக்கரில் முன்புறம் 240மிமி டிஸ்க் பிரேக்கும் பின்புறம் 220 மிமி டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஹோண்டா CB டிரிக்கர் ஸ்டான்டர்ட், டிஎல்எக்ஸ்(DLX) , சிபிஎஸ் (CBS) என்ற மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது. சிவப்பு (பேர்ல் சியளா ரெட்), கருப்பு மற்றும் மீட்டெயார் கிரீன் மெட்டாலிக் என்ற மூன்று நிறங்களில் டிரிக்கர் கிடைக்கிறது. தோற்றம், செயல்திறன் மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களுடன் ஹோண்டாவின் CB டிரிக்கர் இளைஞர்களின் மனம் கவர்ந்த வாகனமாக திகழும் என்பதில் ஐயமில்லை.

செயல்திறன்
என்ஜின் டைப் - சிங்கள் சிலிண்டர், ஏர் கூல்ட் 4 ஸ்ட்ரோக், 149சிசி
பவர் - 14 bhp @ 8500 rpm
டார்க் - 12.5nm @ 6500 rpm
டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ் - 5 ஸ்பீட்

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)