பதிவு செய்த நாள்
15 ஜூலை2013
01:16
புதுடில்லி:நடப்பாண்டின் ஜூன் மாதத்தில், இந்தியாவின் ஏற்றுமதி, 2,380 கோடி டாலராக (1.36 லட்சம் கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே மாதத்தில், 2,490 @காடி டாலராக (1.42 லட்சம் கோடி ரூபாய்) சற்று அதிகரித்து காணப்பட்டது. ஆக, மதிப்பீட்டு மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 4.6 சதவீதம் சரிவடைந்துள்ளது என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இறக்குமதிஎனினும், ஆறுதல் அளிக்கும் வகையில், நாட்டின் இறக்குமதி, மதிப்பீட்டு மாதத்தில், 0.4 சதவீதம் குறைந்து, 3,620 @காடி டாலரிலிருந்து, 3,600 கோடி டாலராக சற்று குறைந்து உள்ளது.இதையடுத்து, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, சென்ற ஜூன் மாதத்தில், 1,225 கோடி டாலர் என்ற அளவில் உள்ளது. இது, இதற்கு முந்தைய மேமாதத்தில், 2,010 @காடி டாலர் என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது.
நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு, தங்கம் இறக்குமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் விளைவாக, சென்ற ஜூன் மாதத்தில், நாட்டின் தங்கம் இறக்குமதி, 245 கோடி டாலராக வீழ்ச்சி கண்டுள்ளது. இது, இதற்கு முந்தைய மே மாதத்தில், 840 கோடி டாலராக மிகவும் அதிகரித்து காணப்பட்டது என, வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனர் அனுப் கேர்.பூஜாரி தெரிவித்தார்.
வர்த்தக பற்றாக்குறைநடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் -ஜூன்) நாட்டின் ஏற்றுமதி, 1.4 சதவீதம் குறைந்து, 7,245 கோடி டாலராக குறைந்து ள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 7,350 கோடி டாலராக அதிகரித்திருந்தது.இதே காலாண்டுகளில், நாட்டின் இறக்குமதி, 6 சதவீதம் உயர்ந்து, 11,570 கோடி டாலரிலிருந்து, 12,260 கோடி டாலராக அதிகரித்துள்ளது.இதையடுத்து, நாட்டின் மொத்த வர்த்தக பற்றாக்குறை, மதிப்பீட்டு காலாண்டில், 4,220 கோடி டாலரிலிருந்து, 5,020 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|