பதிவு செய்த நாள்
22 ஜூலை2013
01:23

குன்னூர்:குன்னூல் தேயிலை ஏல மையத்தில், விற்பனை சரிவடைந்துள்ளதால், தேயிலை உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம், குன்னூர் தேயிலை வர்த்தகர்கள் சங்கத்தின், 28வது ஏலம் நடந்தது. 20.40 லட்சம் கிலோ தேயிலை விற்பனைக்கு வந்தது. இதில், 14.43 லட்சம் கிலோ இலை ரகமும், 5.97 லட்சம் கிலோ டஸ்ட் ரகமும் அடங்கும். இதில், 65 சதவீதம் தேயிலை தூள் மட்டுமே விற்பனையானது.
இலை ரகத்திற்கு, சராசரியாக கிலோவுக்கு, 68 முதல் 73 ரூபாய் வரையிலும், உயர் ரகத்திற்கு, 115 ரூபாய் முதல் 150 ரூபாய் வரையும், டஸ்ட் ரகத்தில் சாதாரண வகைக்கு, 75 ரூபாய் முதல் 82 ரூபாய் வரையும், உயர் வகைக்கு, 120 ரூபாய் முதல் 160 ரூபாய் வரையிலும் விலை கிடைத்தது.சி.டி.சி., ரகம் அதிகபட்சமாக ஒரு கிலோ, 168 ரூபாய்க்கும், டஸ்ட் ரகம் அதிகபட்சமாக, 261 ரூபாய்க்கும் விற்பனையானது. அடுத்த ஏலத்துக்கு மொத்தம், 20.53 லட்சம் கிலோ தேயிலை தயாராக உள்ளது.
கடந்த வாரம் ஒரு கிலோவுக்கு சராசரியாக, 91.25 ரூபாய் கிடைத்த நிலையில், இந்த வாரம் சராசரி விலை, 88.25 ரூபாயாக குறைந்தது. இதுவே இந்தஆண்டின் குறைந்தபட்ச விலையாகும்.இதே போல அரசு கூட்டுறவு தேயிலை ஏல மையத்திலும் விற்பனை குறைந்தது. விற்பனைக்கு வந்த, 4. 97 லட்சம் கிலோவில், 80 சதவீத தேயிலை தூள் மட்டுமே விற்பனையானது. கிலோவுக்கு, 2 ரூபாய் சரிவு ஏற்பட்டது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|