பதிவு செய்த நாள்
23 ஜூலை2013
00:40

புதுடில்லி:உலோக கழிவு இறக்குமதி மீதான, 2.5 சதவீத வரி விதிப்பால், நாட்டின் மோட்டார் வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் ஏற்றுமதி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, இந்திய வார்ப்பட பயிலகம் (ஐ.ஐ.எப்.,) தெரிவித்துள்ளது.உதிரிபாகங்கள்:இது குறித்து, இப்பயிலகத்தின் தலைவர் ஜி.எஸ்.அகர்வாலா கூறியதாவது:இறக்குமதியாகும் உலோக கழிவுகள் மீது, மத்திய அரசு, கடந்த மே மாதம், 2.5 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தியது. இதனால், நாட்டின் மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
அதேசமயம், கழிவு உலோகங்கள் வாயிலாக உற்பத்தி செய்யப்படும், வார்ப்படங்கள் உள்ளிட்ட, உதிரி பாகங்கள் ஏற்றுமதிக்கு, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் எவ்வித வரி விதிப்பும் செய்வதில்லை.இந்த வரிவிதிப்பால், நாட்டின், 10 ஆயிரம் கோடி டாலர் ஏற்றுமதி சந்தை மதிப்பை கொண்ட, இந்தியாவின் மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நம் நாட்டிற்கு வரவேண்டிய ஏற்றுமதி ஆர்டர்கள், சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு, சென்று கொண்டு உள்ளன.நம்நாட்டில், ஆண்டுக்கு, 95 லட்சம் டன் வார்ப்படங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதேசமயம், சீனாவின் வார்ப்படங்கள் உற்பத்தி, ஆண்டுக்கு, 4.10 கோடி டன் என்ற அளவில் உள்ளது. அதே போன்று, சீனாவின், கார் உற்பத்தி ஆண்டுக்கு, 1.70 கோடி என்ற எண்ணிக்கையில் உள்ளது. இது, இந்தியாவில், 30 லட்சமாக உள்ளது.
வர்த்தக உபரி:சீனா அதிகளவில் ஏற்றுமதி மேற்கொள்வதால், அந்நாட்டின் வர்த்தக உபரி அதிகரித்து வருகிறது. ஆனால், நம்நாட்டின் ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரித்து வருகிறது. இது, நாட்டின் வர்த்தக பற்றாக்குறையையும், நடப்பு கணக்கு பற்றாக்குறையையும் அதிகரிக்கச் செய்கிறது.எனவே, மத்திய அரசு, மேற்கண்ட அம்சங்களை கருத்தில் கொண்டு, உலோக கழிவு மீதான இறக்குமதி வரியை, திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அகர்வாலா கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|