பதிவு செய்த நாள்
15 ஆக2013
00:01
சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 88 ரூபாய் சரிவடைந்து, 22,208 ரூபாய்க்கு விற்பனையானது.மத்திய அரசின் இறக்குமதி வரி உயர்வால், அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை, நேற்று, சற்று குறைந்து காணப்பட்டது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,787 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,296 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 29,810 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 11 ரூபாய் குறைந்து, 2,776 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 88 ரூபாய் சரிவடைந்து, 22,208 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 115 ரூபாய் குறைந்து, 29,695 ரூபாய்க்கு விற்பனையானது.ஒரு கிராம் வெள்ளி, 50.60 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 47,300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.கடந்த ஏப்ரல் மாதம், 13ம் தேதிக்கு பின், ஒரு கிராம் வெள்ளி விலை, 50 ரூபாயை தாண்டி விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|