பதிவு செய்த நாள்
16 ஆக2013
00:45

புதுடில்லி:வெங்காயம் விலை உயர்வை சமாளிக்க, சீனா, எகிப்து ஆகிய நாடுகளில் இருந்து அதை இறக்குமதி செய்ய அனுமதிப்பதென, மத்திய அரசுமுடிவு செய்துள்ளது. இதற்காக, இறக்குமதியாகும் வெங்காயத்தை ஆய்வு செய்வதற்கான விதிமுறைகள் தளர்த்தப்படுகின்றன. டெல்லியில் வெங்காயம் விலை, கிலோ, 80 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்,1 கிலோ வெங்காயம்,60- 70 ரூபாய்வரை, தரத்திற்கேற்ப விற்கப்படுகிறது.
இது போன்று, நாடு முழுவதும் வெங்காயம் விலை உச்சத்திற்கு சென்றுள்ளது. இதையடுத்து, வெங்காயம் பிரச்னை குறித்து ஆராய, மத்திய அமைச்சகங்களின் உயரதிகாரிகள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அப்போது, வெங்காயம் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவை விட, அவற்றின் சந்தை வரத்து மிகவும் குறைந்து போயுள்ளதற்கான காரணம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், வெங்காயம் விலையேற்றத்திற்கு, பதுக்கல் தான் முக்கிய காரணம் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டதாக, மத்திய வர்த்தக அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், வெங்காயம் விலையை கட்டுப்படுத்த, சீனா,எகிப்து ஆகிய நாடுகளில் இருந்து, அவற்றை அதிக அளவில் இறக்குமதி செய்ய அனுமதிப்பதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இத்துடன், வெங்காயம் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் நோக்கில், குறைந்த பட்ச ஏற்றுமதி விலையை நிர்ணயிக்க, மத்திய அர”க்கு பரிந்துரைப்பது என, தீர்மானிக்கப் பட்டது.
இதையடுத்து,வெளியுறவு வர்த்தக தலைமை இயக்குனரகம் அறிக்கை ஒன்றை வெளி யிட்டது.அதில், வெங்காயத் திற்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை, டன்னுக்கு, 650 டாலராக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என, தெரிவிக்கப் பட்டுள்ளது.இறக்குமதி விதிமுறை சற்று தளர்த்தப்பட்டுள்ளதால், சீன,எகிப்து வெங்காயங்களை விரைவில், இந்திய சந்தைகளில் காணலாம்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|