பதிவு செய்த நாள்
27 ஆக2013
14:58
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் மார்க்கெட் வெங்காயம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. தரம் வாரியாக பிரிக்கப்பட்டு பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.சில நாட்களுக்கு முன்பு மைசூர் பகுதியில் விளைந்த வெங்காயம் கிலோ ரூ.30க்கு விற்கப்பட்டது. வெங்காய நாற்றுகள் நட்டு அதன் மூலம் விளைவிக்கப்படும் வெங்காயம் நல்ல தரம் உடையவைகளாக இருப்பதால் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இத்தகைய வெங்காயம், சென்னை துறைமுகம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்டவெளி நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தினமும் டன் கணக்கில் ஏஜன்ட்கள் வாங்கிச் செல்கின்றனர். ஏற்றுமதி தரம் வாய்ந்த வெங்காயம் கிலோ ரூ.57 வரை விற்கப்படுகிறது. சாதாரண வகை வெங்காயம் கிலோ ரூ.30லிருந்து ரூ.55 வரை விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|