பதிவு செய்த நாள்
28 ஆக2013
00:20

உள்நாட்டில் இரும்புத் தாது உற்பத்தி குறைந்ததால், அதன் இறக்குமதி, நடப்பு, 2013 - 14ம் நிதியாண்டில், 67 சதவீதம் அதிகரித்து, 50 லட்சம் டன்னாக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.இதனால், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பற்றாக்குறை:சென்ற நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, 4.8 சதவீத மாக (8,800 கோடி டாலர்) உள்ளது. இதை, நடப்பு நிதிஆண்டில், 3.7சதவீதமாக (7,000 கோடிடாலர்) குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதையொட்டி, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின் றன.குறிப்பாக,தங்கம்,வெள்ளி,பிளாட்டினம் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி,10சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
சுங்க வரி உயர்வு காரணமாக, தங்கம் இறக்குமதி குறைந்துள்ளது. அதேசமயம், இரும்புத் தாது உள்ளிட்ட, அத்தி யாவசியப் பொருட்களின் இறக்குமதி அதிகரித்து வருகிறது. இதனால், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, நிர்ணயித்த இலக்கை விட, உயர வாய்ப்புள்ளது.கோவாவில், சுரங்க நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, கர்நாடக சுரங்கங்களுக்கு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி அளிப்பதில் தாமதம், ஒடிசாவில், இரும்புத் தாது சுரங்கங்களுக்கு கட்டுப்பாடு போன்றவற்றால், இரும்புத் தாது உற்பத்தி குறைந்துள்ளது.
இதனால், 2011-12ம் நிதிஆண்டில், 9.70 லட்சம் டன்னாக இருந்த இந்திய உருக்கு துறையின் இரும்புத் தாது இறக்கு மதி, சென்ற, 2012-13ம் நிதியாண்டில், மூன்று மடங்கு அதிகரித்து,30.5 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இது, நடப்பு நிதியாண்டில், 67 சதவீதம் உயர்ந்து, 50 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என, தெரிகிறது.
ஏற்றுமதி:இதே போல், இந்தியாவின் இரும்புத் தாது ஏற்றுமதியும் குறையும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.உலகளவில், 2011ம் ஆண்டு வரை, இரும்புத் தாது ஏற்றுமதியில், இந்தியா,மூன்றாவது இடத்தில் இருந்தது.பல்வேறு காரணங்க ளால், இந்த இடத்தை, இந்தியா தவற விட்டுள்ளது.30 சதவீத ஏற்றுமதி வரி, ரயில்வே சரக்கு கட்டண உயர்வு போன்ற வற்றால், இரும்புத் தாது ஏற்றுமதி சரிவடைந்துள்ளது.கடந்த,2011-12ம் நிதியாண்டில், இரும்புத் தாது ஏற்றுமதி, 6.18 கோடி டன்னாக இருந்தது. இது, சென்ற நிதியாண்டில், 69 சதவீதம் சரிவடைந்து, 1.80 கோடி டன்னாக வீழ்ச்சி கண்டுள் ளது.
உற்பத்தி:கடந்த, 2008 - 09ம் நிதியாண்டில், 21.80 கோடி டன்னாக இருந்த இரும்புத் தாது உற்பத்தி, கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, கடந்த, 2012 - 13ம் நிதியாண்டில், 14 கோடி டன்னாக குறைந்து விட்டது.இதே காலத்தில், உபரி இரும்புத் தாது, 11 கோடியில் இருந்து, 1.7 கோடி டன்னாக சரிவடைந்து உள்ளது.
இதன் காரணமாக, இரும்புத் தாது பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதனால், உருக்கு ஆலைகள், அவற்றின் உற்பத்தி திறனை விட, குறைவான உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றன. சென்ற நிதியாண்டில், உருக்கு ஆலைகள், அவற் றின் உற்பத்தி திறனில், 81 சதவீத அளவிற்கே செயல்பட்டு, 7.83 கோடி டன் உருக்கை உற்பத்தி செய்துள்ளன.
கோவா:இதுகுறித்து, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சாஜன்ஜிந்தால் கூறியதாவது:கர்நாடகா, கோவாவில்சுரங்க நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால், இரும்புத் தாது உற்பத்தி, 14 கோடி டன் என்ற அளவிற்கே இருக்கும்.
அதே சமயம்,நடப்பு நிதியாண்டில், உருக்கு ஆலைகளுக்கு,14.50கோடி டன்னிற்கும் அதிகமாக இரும்புத்தாது தேவைப் படும். இதனால், இரும்புத் தாது இறக்குமதியை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உருக்கு ஆலைகள் தள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.வரும், 2025ம் ஆண்டு, இந்திய உருக்கு ஆலைகள், ஆண்டுக்கு, 30 கோடி டன் உருக்கை உற்பத்தி செய்யும்.இதற்காக, இந்த ஆலைகளுக்கு,ஆண்டுக்கு, 50 கோடி டன் உருக்கு தேவைப் படும் என, உருக்கு அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|