பதிவு செய்த நாள்
28 ஆக2013
09:59

மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து அதலபாதளத்தில் சென்று கொண்டு இருக்கிறது. இன்று(ஆகஸ்ட் 28ம் தேதி, புதன்கிழமை) உச்சமாக ரூ.68-ஐ தாண்டி இருக்கிறது.
சில மாதங்களாக, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, வீழ்ச்சி கண்டு வருகிறது. இதை தடுத்து நிறுத்த, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், பல நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளன. ஆனாலும், சரிவு நிலையை தடுத்து நிறுத்த முடியவில்லை. நேற்று ரூ.66-ஐ தாண்டி இருந்த நிலையில் இன்று மேலும் ஒரு உச்சநிலை சரிவை சந்தித்து இருக்கிறது. வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 118 காசுகள் சரிந்து ரூ.67.42-ஆக சரிந்தது. தொடர்ந்து சரிய தொடங்கிய ரூபாயின் மதிப்பு 10.45 மணியளவில் ரூ.68.75-ஆக இருந்தது. பின்னர் சற்று மீண்டு 3 மணியளவில் ரூ.67.77-ஆக இருந்தது. தொடர்ந்து வர்த்தகநேர முடிவில் ரூ.68.80-ஆக முடிந்தது.
பொறுமை காக்க வேண்டும் - சிதம்பரம்
ரூபாய் வீழ்ச்சி தொடர்பாக நேற்று பார்லிமென்ட்டில் பேசிய நிதியமைச்சர் சிதம்பரம்... அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட, பொருளாதார நெருக்கடியால், அந்நாடுகளுக்கான ஏற்றுமதி குறைந்ததுடன், இறக்குமதியும் அதிகரித்தது. அதனால், கடந்த நிதியாண்டில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4.8 சதவீதமாக அதிகரித்தது.கடந்த, 2012 ஆகஸ்ட் முதல், 2013 மே வரை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, நிலையாகவே இருந்தது. அதன்பின், நடப்பாண்டு, மே, 22ம் தேதி முதல் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணத் துவங்கியது.இந்திய ரூபாயின் மதிப்பு மட்டுமின்றி, வளர்ச்சி கண்டு வரும், பல நாடுகளின் செலாவணி மதிப்பும், சரிவடைந்து வருகிறது.எனவே, ரூபாய் மதிப்பு சரிவடைவதை கண்டு, நாம் அச்சப்பட தேவையில்லை. பொருளாதார வளர்ச்சி, நன்கு அமையும் நிலையில், ரூபாயின் மதிப்பு உயர வாய்ப்பு உள்ளது. தற்போதைய நிலையில், நாம் பொறுமை காக்க வேண்டியுள்ளது. ஆனால், ரூபாயின் மதிப்பு நிச்சயமாக உயரத் துவங்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|